நாங்கள் அதிகாரத்திற்கு வரும் போது தமிழ்த்தாய் வாழ்த்தை மாற்றுவோம் – சீமான்

நாங்கள் அதிகாரத்திற்கு வரும் போது தமிழ்த்தாய் வாழ்த்தை மாற்றுவோம் – சீமான்

நாங்கள் அதிகாரத்திற்கு வரும் போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை மாற்றுவோம் என்று சீமான் பேச்சு.

தமிழ்தாய் வாழ்த்து பாடலை தமிழக அரசின் மாநில பாடலாக முதலமைச்சர் முகா ஸ்டாலின் அறிவித்து, அதற்கான அரசாணையை வெளியிட்டார். இதற்கு பலரும் தமிழக அரசுக்கு பாராட்டுகள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், செய்தியாளர் சந்திப்பில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நாங்கள் அதிகாரத்திற்கு வரும் போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை மாற்றுவோம் என்றும் வேறு பாடல் இருக்கும் எனவும் தெரிவித்தார்.

முழு தமிழ்தாய் வாழ்த்து பாடலையும் பாஜக கொண்டுவர சொன்னால், அதனை பாராட்டத்தான் வேண்டும் என்றும் கூறினார். சீமானுக்கு ஓட்டு போட்டால் பாஜக வந்துவிடும் என்று கூறினார்கள். தற்போது திமுக பாஜகவுக்கு உள்ள சென்றுவிட்டது என விமர்சித்தார். நாம் தமிழர் கட்சி தொடர்பான நடவடிக்கையில் ஈடுபட்டதாக திருவாரூரை சேர்ந்த குமார் என்ற இளைஞரை வாழ்நாள் தந்தையுடன் நாடு கடத்தியது சிங்கப்பூர் அரசு என்று கூறினார்.

திமுகவை தான் அதிகம் எதிர்க்கிறீர்கள் என்று விமர்சனம் குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, அப்படித்தான் எதிர்ப்பேன், இனத்தை கொன்ற துரோகி என்றும் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியை எங்கள் அண்ணனுக்கு பிடிக்காது, எனக்கு கருணாநிதியை பிடிக்காது என தெரிவித்தார்.

இதன் பின் செருப்பை தூக்கி காட்டிய விவகாரம் குறித்த கேள்விக்கு, செருப்பை தூக்கி காட்டுவேன் சொன்னத பெருமையா நினையுங்கள். மேடையில் இனி காலனி காட்டமாட்டேன் என்றும் திமுக தான் உண்மையில் சங்கி எனவும் கூறினார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube