விநாயகர் சிலையை கரைக்கையில், இந்த விதிகளை கவனத்தில் கொண்டால் மிக நன்று..!

விநாயகர் சிலையை கரைக்கையில், இந்த விதிகளை கவனத்தில் கொண்டால் மிக நன்று..!

ஆண்டு தோறும் ஆவணி மாதம் அமாவாசையை அடுத்த சதுர்த்தி அன்று உலகம் முழுக்க விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. வீடுதோறும் களி மண்ணால் செய்த பிள்ளையார் சிலைகளை எருக்கம் பூ அணிவித்து, அருகம்புல், செவ்வந்தி, மல்லிகை, அரளி போன்ற மலர்களால் அர்ச்சனை செய்வது வழக்கமாக இருக்கிறது.

Related image

இதில், பத்தாம் நாட்களுக்கு மேலாக நடக்கும் பூஜையில், தங்களின் வீடுகள் மற்றும் கோவில்களில் உள்ள விநாயகர் சிலைகளை கரைக்க அருகில் உள்ள நீர்நிலைகளுக்கு கொண்டு செல்வார்கள். நீர்நிலைகளில் கரைக்கும் பொது, அந்த சிலையில் உள்ள வண்ண சாயங்கள், அலங்கார பொருட்களான மாலை, பூ, இலை போன்ற அனைத்தும் நீர்நிலைகளை மாசுப்படுத்துகிறது.

Image result for ganesh chaturthi sea

மேலும், அந்த நீர்நிலைகளில் வாழும் அனைத்து உயிரினங்களும் பாதிக்கப்படுவது மட்டுமின்றி, உயிரிழந்து கரை ஒதுங்குகின்றது. இதன் மூலம், சுற்றுவட்டாரத்தில் துர்நாற்றம் வீசி, தோற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது.

இதனை தடுக்கும் வழிமுறைகள்:

  • ரசாயனம் கலந்த பெயிண்ட் உபயோகிப்பதை தவிர்க்கவும்.
  • நீர்நிலைகளில் சிலைகளை கொண்டு செல்லும் பொது, மாலைகள் மற்றும் இலைகளை தவிர்க்கவும்.
  • சிலையில் இருக்கும் பிளாஸ்டிக்கால் ஆன கவர்களை எடுத்து விடவும்.
Join our channel google news Youtube