கீர்த்தி சுரேஷின் 'பெங்குயின்' படத்தின் டீசர் எப்போது தெரியுமா .!

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள பெங்குயின் படத்தின் டீசர் ஜூன் 8ல்

By ragi | Published: Jun 07, 2020 10:35 AM

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள பெங்குயின் படத்தின் டீசர் ஜூன் 8ல் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து முடித்திருக்கும் திரைப்படம் 'பெங்குயின்'. ஹீரோயினுக்கு கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கர்ப்பிணி பெண். இந்த படத்தில் மாதம்பட்டி ரங்கராஜ், லிங்கா உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படம் ஒடிடி பிளாட்பாரத்தில் வருகிற ஜீன் மாதம் 19ம் தேதி தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டிரைலரை வருகிற ஜீன் மாதம் 8ம் தேதி வெளியிடப்படும் என்று இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அறிவித்துள்ளார். மேலும் ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படத்தினை தொடர்ந்து ஓடிடியில் வெளியாகும் இரண்டாவது படம் பெங்குயின் என்பது குறிப்பிடத்தக்கது.

Step2: Place in ads Display sections

unicc