சியான் துருவ நட்சத்திரம் படத்தின் ரிலீஸ் எப்போது.! இயக்குநர் கூறிய பதில்.!

விக்ரம் நடிப்பில் கெளதம் மேனன் இயக்கத்தில் வெகு நாட்களாக கிடப்பில் கிடக்கும்

By ragi | Published: May 30, 2020 02:07 PM

விக்ரம் நடிப்பில் கெளதம் மேனன் இயக்கத்தில் வெகு நாட்களாக கிடப்பில் கிடக்கும் துருவ நட்சத்திரம் படத்தின் ரிலீஸ் குறித்து கூறியுள்ளார் கெளதம் மேனன் .

 

தமிழ் சினிமா கொண்டாடும் இயக்குநர்களில் ஒருவர் தான் கௌதம் வாசுதேவ் மேனன். இவரது படங்கள் அனைத்தும் ரசிக்க தக்கதாக இருப்பது மட்டுமில்லாமல் அதில் நடிப்பவர்கள் கெத்தாகவும் காட்டியிருப்பார். இவர் பல படங்களில் நடித்தும் உள்ளார்.இவரது இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான திரைப்படம் எனை நோக்கி பாயும் தோட்டா. இந்த படத்தில் தனுஷ் அவர்கள் ஹீரோவாக நடித்திருந்தார். அதனையடுத்து அடுத்ததாக இவர் தயாரிக்கும் திரைப்படம் ' யோசுவா இமை போல் காக்க' இந்த படத்தில் வருண் நாயகனாக நடிக்கவிருக்கிறார். மேலும் இவரது இயக்கத்தில் உருவாகி வரும் துருவ நட்சத்திரம் படம் பல மாதங்களாக கிடப்பில் உள்ளது. சியான் விக்ரம் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில் ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிம்ரன், அர்ஜுன் தாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் கௌதம் மேனன் மற்றும் ஈஷாரி கணேஷ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். 

 

இந்த படத்தின் ரிலீஸ் குறித்து கௌதம் மேனனிடம் கேட்கையில், இந்த படத்தின் வேலைகள் அனைத்தும் லாக்டவுன் முடிந்ததும் தொடங்கப்படும் என்றும், விரைவில் துருவ நட்சத்திரம் படம் திரைக்கு வரும் என்றும் நம்பிக்கையாக தெரிவித்துள்ளார்.

Step2: Place in ads Display sections

unicc