Abhirami : எனக்கு 17 வயசு இருக்கும்போது 40 வயசு பையனுக்கு…விருமாண்டி அபிராமி வேதனை!

By

virumandi abhirami

தமிழ் சினிமாவில் விருமாண்டி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை அபிராமி. இந்த திரைப்படத்தை தொடர்ந்து அபிராமி ஒரு சில படங்களில் நடித்தார். இருப்பினும் விருமாண்டி படத்திற்கு கொடுத்த வெற்றியை போல அவருக்கு எந்த படமும் பெரிய அளவில் வெற்றியை கொடுக்கவில்லை என்றே கூறலாம்.

இதனால் சில ஆண்டுகள் தமிழ் சினிமாவில் நடிக்காமல் இருந்த அபிராமி அப்படியே மலையாள சினிமா பக்கம் சென்றுவிட்டார். பிறகு மீண்டும் தமிழ் சினிமாவுக்கு ரீ-எண்டரி கொடுத்தார். இருப்பினும் அவருக்கு பெரிதாக படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. கடைசியாக இவர் பாபா பிளாக் ஷிப் திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அந்த படம் நல்ல விமர்சனத்தை பெற்றது. இதற்கிடையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அபிராமி தனக்கு 17 வயது இருக்கும்போது 40 வயது பயனுக்கு அம்மாவாக நடித்ததாக கூறியுள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது ” நடிகை என்றால் எந்த கதாபாத்திரங்கள் கிடைத்தாலும் அதில் நடிக்கவேண்டும்.

என்னை எல்லாம் கேட்டீர்கள் என்றால் கிட்டத்தட்ட எனக்கு ஒரு 17 வயது இருக்கும்போது 40 வயது பயனுக்கு அம்மாவாக நடித்தேன். அது திரைப்படம் இல்லை ஒரு சீரியலில் நடித்தேன். அது தான் எங்களுக்கு வாழ்வை கொடுக்கிறது. ஏனென்றால், நடிகை என்றால் நாம் எல்லா கதாபாத்திரங்களிலும் நடிக்கவேண்டும்.

அப்படி நடித்தால் மட்டும் தான் பார்க்கும் மக்களுக்கும் போர் அடிக்காது ஒரு நடிகையாக எனக்கும் போர் அடிக்காது. அதைவிட்டுவிட்டு சேலை கட்டிக்கொண்டு ஒரே மாதிரி நடித்தால் அது சரியாக இருக்காது” எனவும் அபிராமி தெரிவித்துள்ளார். இவர் பேசியதை பார்த்த நெட்டிசன்கள் நீங்கள் 17 வயதில் 40 வயது பயனுக்கு அம்மாவாக நடித்தேன் என்று சொல்லும்போது உங்கள் மனதில் வேதனை இருந்தது தெரிகிறது என கூறிவருகிறார்கள்.