கல்லூரிகளில் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற வேண்டிய தேர்வுகள் எப்போது?

கல்லூரிகளில் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற வேண்டிய தேர்வுகள் எப்போது?

கல்லூரியில் செமஸ்டர் தேர்வுகளை எப்போது நடத்துவது என்பது குறித்து உயர் கல்வித்துறை அமைச்சர் வரும் வாரத்தில் ஆலோசனை நடத்த உள்ளார்.

கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு, நடவிருந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டன. இதையடுத்து சமீபத்தில் தமிழகத்தில் 10,11,12 ஆம் வகுப்பு பள்ளி தேர்வுகள் தேதி அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், கல்லூரிகளில் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற வேண்டிய செமஸ்டர் தேர்வுகளை எப்போது நடத்துவது என்பது குறித்து உயர் கல்வித்துறை அமைச்சர் வரும் வாரத்தில் ஆலோசனை நடத்த உள்ளார்.

திங்கள் அல்லது செவ்வாக்கிழமை நடைபெறும் ஆலோசனையில் உயர் கல்வித்துறை செயலாளர் மற்றும் அதிகாரிகள் பலர் பங்கேற்கவுள்ளனர். மேலும், முதல், இரண்டாவது ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கு தேர்வை ஜூலையில் நடத்த இயலாவிட்டால் கைவிவிடலாம் என யுஜிசி தெரிவித்தது குறித்து வரும் வாரத்தில் ஆலோசனை நடத்த உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube