வாட்ஸ்அப் பிரைவசி அம்சங்கள்: உங்கள் கணக்கை பாதுகாப்பாக வைத்திருக்க சில வழிமுறைகள்..!

வாட்ஸ்அப் பிரைவசி அம்சங்கள்: உங்கள் கணக்கை பாதுகாப்பாக வைத்திருக்க சில வழிமுறைகள்..!

  • உலகளவில் 2 பில்லியன் மக்கள் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். 
  • உங்கள் வாட்ஸ்ஆப் சேட்ஸ், போன்றவற்றை பாதுகாப்பாக வைத்திருக்க சில வழிமுறைகள் இதோ!

சில ஆண்டுகளுக்கு முன்பு, பேஸ்புக் நிறுவனம், வாட்ஸ்அப்ஐ வாங்கியது. இந்த செயலி மூலம் மக்கள் கால், சேட், போன்றவற்றை செய்து கொள்ளலாம். மேலும், அலுவலகங்களிலும் இந்த செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.

ஏனெனில், இதில் போட்டோ, வீடியோ போன்றவற்றை எளிதாக பரிமாற்றி கொள்ளலாம். மேலும் இதில் பரிமாற்றம் தகவல்களை யாராலும் ஊடுருவி பார்க்க முடியாது என பேஸ்புக் நிறுவனம் கூறியுள்ளது. இந்நிலையில், உங்கள் தகவல்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை சில முக்கியமான ப்ரைவஸி அமைப்புகள்!

1. டூ-ஸ்டேப் வெரிபிகேஷன்:

Image result for whatsapp two step verification code

உங்கள் ஸ்மாட்போனில் மீண்டும் வாட்ஸஅப்ஐ மீண்டும் நிறுவும் போது அல்லது மீண்டும் பதிவிறக்கம் செய்யும்போது கூட பயன்பாட்டைப் பாதுகாக்க டூ-ஸ்டேப் வெரிபிகேஷன் அமைப்பு ஒரு முக்கிய அம்சமாகும்.

வாட்ஸ்அப்ஐ பதிவிறக்கும் போது அல்லது மீண்டும் நிறுவும் போது ஆறு-இலக்க PIN குறியீட்டை வாட்ஸ்அப் சரிபார்ப்பாக டூ-ஸ்டேப் வெரிபிகேஷன் அமைப்பு உதவும்.

இதனை இயக்க, வாட்ஸ்அப் செட்டிங்ஸ் (Settings) சென்று அக்கவுண்ட்(account) செல்லவும். அதன் கீழ், நீங்கள் டூ-ஸ்டேப் வெரிபிகேஷன் ஆப்ஷனை காண்பீர்கள். அதற்குள் சென்று உங்களின் 6-டிஜிட் கோட் (Code) போடவும்.

2. பின்கேர்ப்ரின்ட் அன்லாக்:

Image result for whatsapp fingerprint settings

வாட்ஸ்ஆப் பயனாளர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பாய் இருந்தது, பின்கேர்ப்ரின்ட் அன்லாக். இது, பின்கேர்ப்ரின்ட் ஸ்கேனர் உள்ள போன்களில் மட்டும் எடுக்கும், மேலும், IOS களில் பேஸ் லாக் எடுக்கும். இதனை, settings-account-privacy-fingerprint lock. அதன்பின் fingerprint lock குள் சென்று உங்கள் விரல்ரேகையை பதிவு செய்து உபயோகிக்கலாம்.

3. உங்களின் ப்ரொபைல், ஸ்டேட்டஸ் மற்றும் இதர செட்டிங்ஸ்:

Image result for whatsapp status seen privacy

உங்களின் வாட்ஸ் ஆப் புகைப்படம், அபோட் (About) மற்றும் உங்களின் ஸ்டேட்டஸை அனைவரும் பார்க்கிறார்கள் என கவலைப்படுகிறீர்களா? உங்கள் ஸ்டேட்டஸை யார் காணலாம் என்பதைக் காண்பதற்கான கட்டுப்பாட்டை வாட்ஸ்அப் வழங்குகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களை தவிர வேறு யாரும் உங்களின் ஸ்டேட்டஸை காண முடியாது.

இதனை இயக்க, settings-account-privacy-status குள் சென்று My contacts except எனும் அப்ஷன் இருக்கும். அதில் உங்களின் ஸ்டேட்டஸை யார் பார்க்க வேண்டாம் என நினைக்கீங்களோ, அவர்களை ஹைட் செய்யலாம்.

அதைப்போலவே, நீங்கள் உங்களின் வாட்ஸ் ஆப் புகைப்படம், அபோட் (About) போன்றவற்றையும் உங்களின் காண்டக்ஸில் உள்ளவர்கள் மற்றும் பார்க்குமாறும் வைக்கலாம். மேலும், உங்களை வாட்ஸாப் குரூப் உங்களின் காண்டக்ஸில் உள்ளவர்கள் மற்றும் சேர்க்குமாறும் செய்யலாம்.

Join our channel google news Youtube