நாளை வசூலை குவிக்கும் படம் எது தெரியுமா!!!

பேட்ட, விஸ்வாசம் நாளை வெற்றிகரமாக திரைக்கு வருகிறது. தமிழ் நாடே பேனர்,போஸ்டர் என  மிகுந்த ஆரவாரத்துடன் இருக்கிறது. ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடனும், உற்சாகத்துடனும் இருக்கிறார்கள். இதனால் இந்த பொங்கல் திருவிழாவாக காட்சியளிக்கும் என்று பலரும் கூறிவருகிறார்கள்.

சாலையில் எங்கு திரும்பினாலும் ரஜினி, அஜித் பேனர், போஸ்டர்கள் தான் அதிகம் இருக்கிறது முதல் நாள் பாக்ஸ் ஆபிஸில் யார் வெற்றி பெறுவார்கள்  என்று மிகப்பெரிய போட்டியே நடந்து வருகின்றது.

இந்த போட்டியில்  திரையரங்குகளை அதிக அளவில்  பிடித்த விஸ்வாசமே அதிகமாக வசூல் சாதனை பிடிக்கும் என்று பலரும் கூறுகிறார்கள் .ஆனால், சென்னையில் முதலிடத்தில் சூப்பர் ஸ்டாரின் பேட்ட திரைப்படம் தான் வசூலை குவிக்கும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் முதல் நாளில் ‘ விஸ்வாசம் ‘ ரூ 18 கோடியை வசூல் செய்யுமாம். மேலும் ரஜினியின் பேட்ட ரூ 14 முதல் 16 கோடி வரை முதல் நாள் வசூல் செய்யும்  என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

 

 

Leave a Comment