எது சொன்னாலும், அவரது முகத்தில் சிரிப்பு மட்டுமே பதில் - பாகிஸ்தான் முன்னாள் கேப்டன்

சச்சின் டெண்டுல்கர் பேட்டிங் செய்யும் நேரத்தில், அவர் ஆட்டமிழந்து வெளியேறக்

By balakaliyamoorthy | Published: May 14, 2020 02:01 PM

சச்சின் டெண்டுல்கர் பேட்டிங் செய்யும் நேரத்தில், அவர் ஆட்டமிழந்து வெளியேறக் கூடாது என தனது மனதில் தோன்றும் என பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ரஷீத் லத்தீப் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பருமான ரஷீத் லத்தீப் இந்திய நட்சத்திர பேட்ஸ்மேனான சச்சின் டெண்டுல்கருக்கு எதிராக விளையாடிய அனுபவத்தை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், நான் கீப்பிங் செய்யும்போது பல்வேறு வீரர்கள் விளையாடுவார்கள். ஆனால், சச்சின் பேட்டிங் செய்ய வந்தால் மட்டும் அவர் ஆட்டமிழந்து வெளியேறக் கூடாது என எனது மனதில் தோன்றும் என்றும் சச்சின் விளையாடும் போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும் என கூறியுள்ளார். தொலைக்காட்சியில் அவரது ஆட்டத்தை பார்க்கும் போது இதுபோன்ற உணர்வு எனக்கு தோன்றியதில்லை. நான் அவர் பின்னால் நின்று கீப்பிங் செய்யும்போது அவர் வெளியேறக் கூடாது என என் மனதில் தோன்றும் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து பேசிய லத்தீப், சச்சின் தனித்தன்மை உடையவர் என்றும் நான் அவரது பின்னால் நின்று எது சொன்னாலும், அவரது முகத்தில் சிரிப்பு மட்டும் தான் பதிலாக இருக்கும். ஆனால், மற்ற கிரிக்கெட் வீரர்கள் அப்படி இருக்க மாட்டார்கள். இந்த விஷயத்தில் சச்சினும், முகமது அசாருதீனும் தான் வித்தியாசமானவர்கள் என்று குறிப்பிட்டுள்ளார். அவர்களுக்கு எதிரில் விளையாடும் வீரர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பார்கள். அதனால் தான் சச்சினை பார்த்து அனைவரும் ஆச்சரியப்படுகிறார்கள். குறிப்பாக விக்கெட் கீப்பர்களுக்கு அவரை மிகவும் பிடிக்க காரணம் இதுதான் என்று கூறியுள்ளார். மேலும், சச்சின் பந்துகளை அதிரடியாக விளாசினாலும், வார்த்தைகளால் யாரையும் காயப்படுத்தமாட்டார். கிரிக்கெட் மைதானத்தில் விளையாடும் போது அவர் நடந்துகொள்ளும் விதம் எப்போதும் நினைவில் இருக்கும் என்று ரஷீத் லத்தீப் கூறியுள்ளார். 

Step2: Place in ads Display sections

unicc