நடிகர் சிம்புவின் 48-வது திரைப்படத்தை பிரபல இயக்குனரான தேசிங் பெரியசாமி இயக்குகிறார். படத்தை நடிகர் கமல்ஹாசன் தனது ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். இந்த படத்திற்காக சிம்பு இதுவரை இல்லாத அளவிற்கு முற்றிலும் வித்தியாசமான லுக்கில் இருக்கிறார்.

]
இந்த திரைப்படத்தின் மூலம் தேசிங் பெரியசாமி + சிம்பு ஆகியோர் கூட்டணி இணைந்துள்ளதால் இந்த படம் எப்படி பட்ட படம் என்கிற அளவிற்கு பெரிய எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது. இதற்கிடையில், படம் பற்றி அசத்தலான அப்டேட்டை இயக்குனர் தேசிங் பெரியசாமி கொடுத்துள்ளார்.
🔥 #STR48
#Ulaganayagan #KamalHaasan #Atman #SilambarasanTR #RKFI56_STR48 #BLOODandBATTLE @ikamalhaasan @SilambarasanTR_ @desingh_dp#Mahendran @RKFI @turmericmediaTM @magizhmandram pic.twitter.com/RW0CUw6lFy— Raaj Kamal Films International (@RKFI) May 22, 2023
சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய தேசிங் பெரியசாமி “STR48” திரைப்படம் அருமையாக இருக்கும். இது ஒரு வரலாற்று திரைப்படமாக இருக்கும். கண்டிப்பாக இந்த படம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவர்க்கும் பிடிக்கும் படியாக இயக்கவுள்ளேன்.

]
படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகிறது. எனவே கண்டிப்பாக பிரமாண்டமாக இருக்கும். இந்த படத்திற்கான படப்பிடிப்பை வருகின்ற ஆகஸ்ட் மாதம் தொடங்க திட்டமிட்டுள்ளோம்” என கூறியுள்ளார். விரைவில் “STR48” படத்திற்கு யார் இசையமைக்கைபோகிறார்..யார் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்கப்போகிறார் என்கிற அறிவிப்பு வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.