30.5 C
Chennai
Saturday, June 10, 2023

மாநில முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் பணியிடைநீக்கம்… பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு.!

தமிழகப்பள்ளி மாணவர்கள் தேசிய விளையாட்டுப்போட்டிகளுக்கு கலந்து கொள்ளாத விவகாரத்தில்...

புதுச்சேரி காங்கிரஸ் தலைவராக வைத்திலிங்கம் நியமனம்… கார்கே.!

புதுச்சேரிக்கு காங்கிரஸ் தலைவராக வைத்திலிங்கம் எம்.பி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அடுத்த...

இனிமேல் பக்காவான ரைடு..அறிமுகமானது ‘ஹோண்டா டியோ எச்-ஸ்மார்ட்’..! விலை எவ்வளவு தெரியுமா..!

ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம், ஹோண்டா டியோ எச்-ஸ்மார்ட் ஸ்கூட்டரை...

ஐபிஎல் பிளேஆப்ஸில் ஒருவேளை மழை குறுக்கிட்டு விளையாட முடியாவிட்டால் என்ன நடக்கும்..!

ஐபிஎல் பிளேஆப்ஸில் ஒருவேளை மழை குறுக்கிட்டு ஆட்டம் தடைபட்டால் என்ன நடக்கும் இங்கே பார்க்கலாம்…

ஐபிஎல் 2023 தொடர் ஒருவழியாக இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. லீக் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்து பிளேஆப் சுற்று போட்டிகள் இன்று தொடங்குகின்றன. இன்று நடைபெறும் முதல் தகுதிச்சுற்று போட்டியில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் சேப்பாக்கம் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்துகின்றன.

நாளை நடைபெறும் வெளியேற்று சுற்று போட்டியில் மும்பை மற்றும் லக்னோ அணிகள் சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகின்றன. இரண்டாவது தகுதிச்சுற்று போட்டி குஜராத் நரேந்திரமோடி ஸ்டேடியத்தில் வரும் 26 ஆம் தேதியும், இறுதிப்போட்டி அதே மைதானத்தில் 28 ஆம் தேதியும் நடைபெறுகிறது.

ஒருவேளை பிளேஆப் சுற்று போட்டிகளின் போது மழை குறுக்கிட்டு ஆட்டம் தடை பட்டால், 5 ஓவர்கள் முறை பின்பற்றப்படும், அதுவும் முடியாவிட்டால் சூப்பர் ஓவர் முறை அதுவும் நடக்க வாய்ப்பு இல்லாத பட்சத்தில், புள்ளிப்பட்டியலில் முதலிடம் வகிக்கும் அணியே வென்றதாகக் கருதப்படும்.

அதாவது இன்று சேப்பாக்கத்தில் சென்னை மற்றும் குஜராத் அணிகளுக்கிடையே நடைபெறும் முதல் தகுதிச்சுற்று போட்டியில் மழை குறுக்கிட்டு விளையாட முடியாமல் போனால், முதலிடத்தில் இருக்கும் குஜராத் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு நுழைந்துவிடும்.

இதேபோல் பிளேஆப்சின் எந்த போட்டியும் நடைபெறா விட்டால் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திலிருக்கும் அணியான குஜராத் அணி, சாம்பியன் பட்டம் வென்றதாகக் கூறப்படும். ஆனால் சேப்பாக்கத்தில் இன்று மழை பெய்வதற்கான எந்தவித வாய்ப்பும் இல்லையென்று தகவல் வெளியாகியுள்ளது.