“என்ன சுவாமி சவுக்கியமா ” முதல் நாளே நாடாளுமன்றத்தில் தெறிக்கவிட்ட வைகோ !

23 ஆண்டுகளுக்கு பிறகு மாநிலங்களவை உறுப்பினராக டெல்லி நாடாளுமன்றத்தில் அடியெடுத்து வைத்தார் வைகோ.

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணியின் பொது திமுக உறுதியளித்ததை போல ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடம் மதிமுகவிற்கு வழங்கப்பட்டது. மதிமுக பொது செயலாளர் வைகோ அவர்கள் போட்டியின்று தேர்வு செய்யபட்ட்டார். ஜூலை 25 ம் தேதி மாநிலங்களைவையில் உறுப்பினர்கள் பதவி ஏற்க இருக்கும் நிலையில் வைகோ அவர்கள் இன்று நாடாளுமன்றம் சென்றார்.

 

 

உள்ளே சென்ற பின், அரசியல் மூத்த தலைவர்களான  அறிஞர் அண்ணா, அண்ணல் அம்பேத்கார். காமராஜர் .முத்துராமலிங்தேவர் மற்றும் முன்னாள் முதல்வர்களான எம்.ஜி.ஆர் . ஜெயலாளித்த ஆகியோர் திரவுருவச்சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதையை செலுத்தினார். பின்னர், நடந்து செல்கையில், தற்செயலாக பாஜக மூத்த தலைவரான சுப்ரமணிய சுவாமியை சந்தித்தார். உடனே  அருகில் சென்று கட்டியணைத்து “என்ன சுவாமி சவுக்கியமா” என்று பாசம் பொழிந்தார். பார்த்து நீண்ட நாட்கள் ஆகி விட்டதாகவும் கூறினார்.

வைகோ வுக்கு மாநிலங்களைவை பதவி வழங்க கூடாது என்று  துணை குடியரசுத்தலைவருக்கு கடிதம் எழுதி இருந்த சூழலில், இன்று இருவரும் நட்பாக பழகியது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.