கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் நம்மை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும், என்ன செய்ய கூடாது?

கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களா நீங்கள், உங்களை பாதுகாத்து கொள்ள என்ன செய்ய வேண்டும், என்ன செய்ய கூடாது என்பது குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள். 

நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. தினமும் லட்சக்கணக்கானோர் புதிதாக பாதிக்கப்படும் நிலையில், ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து கொண்டும் இருக்கின்றனர். பல்வேறு மாநில அரசுகள் மருத்துவமனையில் படுக்கையறை வசதிகள் மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக நோயாளிகளை அனுமதிக்கவே அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாலும், வீட்டில் தனிமை படுத்தப்பட்டிருந்தாலும் நம்மை நாம் பாதுக்கப்பட்டதற்கு என்ன செய்யலாம் என்ன செய்ய கூடாது என்பது குறித்து பார்க்கலாம் வாருங்கள்.

கொரோனா தொற்றிருப்பதாக சந்தேகித்தால் செய்யவேண்டியவை ….

உங்களுக்கு கொரோனா தோற்று இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டால், முதலில் உங்களை தனிமைப்படுத்தி கொள்ளுங்கள். மருத்துவரை அணுகி ஆர்.டி மற்றும் பி.சி ஆர் சோதனை செய்து கொள்ளுங்கள். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தான் இருக்க வேண்டும் என்று இல்லை. ஏனென்றால் சிலருக்கு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு முறையான உணவுகளை எடுத்துக்கொண்டாலே சரியாகி விடும். வெளியில் சென்றால் முக கவசத்தை அணிந்து செல்லுங்கள். ஆக்சிஜன் அளவு 95 சதவீதத்திற்கு குறைவாக இருந்தால் மருத்துவமனைக்கு சென்று முறையாக கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

செய்யக்கூடாதவை …

தனிமைப்படுத்தப்பட்ட உங்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம். ஆட்டோ சவாரியை முற்றிலுமாக தவிர்த்திடுங்கள். சுயமாக எந்த மருந்துகளையும் எடுத்து கொள்ள வேண்டும். பிறரின் பொருட்களை நீங்கள் உபயோகிப்பதையும், உங்கள் உணவை பிறருடன் பகிர்ந்து கொள்வதையும் நிறுத்தி கொள்ளுங்கள்.

கொரோனா உறுதி செய்யப்பட்டால் செய்ய வேண்டியவை….

ஆர்.டி மற்றும் பி.சி.ஆர் சோதனை செய்து மருத்துவர்களின் ஆலோசனையை முறையாக கடைபிடியுங்கள். உணவுகளை சரியான நேரத்தில் உட்கொண்டு அதிக நீர் ஆகாரங்களை எடுத்து கொள்ளுங்கள். அடிக்கடி குளித்து தூய்மையாக இருங்கள், முக கவசம் அணிந்து சமூக இடைவெளிகளை பின்பற்றி நடவுங்கள். மருத்துவமனையில் இருந்தாலும் முறையான மருந்துகளை உட்கொண்டு தூய்மையை கடைபிடியுங்கள். தும்மும் போதும் இருமும் போதும் கைக்குட்டை கொண்டு முகத்தை மூடி கொள்ளுங்கள். அடிக்கடி கைக்குட்டையை கழுவுங்கள். கைகளை தண்ணீர் கொண்டு அடிக்கடி கழுவுங்கள், அல்லது சரியான சானிடைசர்களை பயன்படுத்துங்கள்.

செய்ய கூடாதவை …

பிறருடன் உங்கள் உணவுகளை பகிர்ந்து கொள்ள வேண்டாம். பொது இடங்களுக்கு செல்வதை முற்றிலுமாக தவிர்த்திடுங்கள். ஆட்டோ மற்றும் கார் சவாரியை முழுவதுமாக தவிர்த்திடுங்கள். மற்றவர்களிடமிருந்து முழுவதுமாக உங்களை தனிமை படுத்தி கொள்ளுங்கள்.

author avatar
Rebekal