இவற்றை விட வேறு என்ன தகுதி வேண்டும்? – டாக்.ராமதாஸ்

குடியரசு நாள் அணிவகுப்பில் ஏற்க முடியாத காரணங்களைக் கூறி தமிழ்நாட்டின் அலங்கார ஊர்திக்கு இடம் மறுக்கக் கூடாது என டாக்.ராமதாஸ் ட்வீட்.

டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொள்ள கோரிக்கை செய்து தமிழக அரசு சார்பில் வ.உ.சி, வேலுநாச்சியார், பாரதியார், கப்பலோட்டிய தமிழர் உள்ளிட்ட சுதந்திர போராட்ட வீரர்களின் உருவப்படங்கள் அடங்கிய ஊர்திகள் காண்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தின் சார்பில் கொடுக்கப்பட்ட ஊர்திகள் மத்திய அரசால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கு அரசியல் கட்சியினர் பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘.தில்லியில் 26ஆம் தேதி நடைபெறவிருக்கும் குடியரசு நாள் அணிவகுப்பில் வஉசி, பாரதியார், வேலுநாச்சியார் மற்றும் மருது சகோதரர்கள் உருவங்கள் அடங்கிய தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருப்பது ஏமாற்றமளிக்கிறது. அதற்காக கூறப்படும் காரணம் ஏற்க முடியாதது!

இந்திய விடுதலையின் 75-ஆவது ஆண்டு கொண்டாடப்படுகிறது. இந்த சிறப்பான தருணத்தில் விடுதலைக்காக போராடிய இவர்களின் உருவம் அடங்கிய அலங்கார ஊர்தி அணிவகுப்பில் இடம் பெறுவதே சிறப்பு. அவர்களை வெளிநாட்டு தலைவர்களுக்கு தெரியாது என்று கூறுவது தவறான வாதம்!

வ.உ.சியின் 150 ஆவது ஆண்டு விழா இப்போது கொண்டாடப்படுகிறது. பாரதியார் உலகறிந்த கவிஞர். வேலுநாச்சியாரின் வீரத்தை அண்மையில் தான் பிரதமர் பாராட்டியிருந்தார். மருது சகோதரர்கள் வேலுநாச்சியாரின் போராட்டத்தை தொடர்ந்தவர்கள். இவற்றை விட வேறு என்ன தகுதி வேண்டும்?

குடியரசு நாள் அணிவகுப்பில் ஏற்க முடியாத காரணங்களைக் கூறி தமிழ்நாட்டின் அலங்கார ஊர்திக்கு இடம் மறுக்கக் கூடாது. மத்திய அரசு அதன் முடிவை மாற்றிக் கொண்டு தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி அணிவகுப்பில் இடம் பெறுவதை உறுதி செய்ய வேண்டும்!’ என பதிவிட்டுள்ளார்.

லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Recent Posts

செல்வராகவன் கெட்டவார்த்தை போட்டு திட்டி விரட்டிட்டாரு! பாவா லட்சுமணன் வேதனை!

Selvaraghavan : செல்வராகவன் தன்னை கெட்டவார்த்தை போட்டு திட்டியதாக பாவா லட்சுமணன் வேதனையுடன் தெரிவித்துள்ளார். இயக்குனர் செல்வராகவன் படப்பிடிப்பு தளங்களில் மிகவும் கோபமாக நடந்து கொள்வார் என…

4 mins ago

மக்களே கவனம்!! தமிழகத்தில் வெப்ப அலை வீசும்…மஞ்சள் எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்!

Weather Update: தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு வெப்ப அலை அதிகரித்து காணப்படும். தமிழகத்தில் இன்று வெப்ப அலை வீசும் என இந்திய வானிலை மையம்…

8 mins ago

320-ஐ எட்டியது சர்க்கரை அளவு…சிறையில் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் ஊசி.!

Arvind Kejriwal: திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் ஊசி வழங்கப்பட்டுள்ளது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு,…

1 hour ago

வீரர்கள் குறைகளை உணர்ந்து விளையாடனும்! தோல்விக்கு பின் ஹர்திக் பாண்டியா பேச்சு!

Hardik Pandya : மும்பை வீரர்கள் குறைகளை உணர்ந்து விளையாடவேண்டும் என்று அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார். நேற்று ஏப்ரல் 23-ஆம் தேதி ஜெய்ப்பூர் சவாய்…

1 hour ago

கணவர் இல்லாத உலகில் நான் இருக்க மாட்டேன்… ஆணவ கொலையால் பறிபோன இன்னொரு உயிர்.!

Honor Killing : சென்னையில் ஆணவக்கொலை செய்யப்பட்டவரின் மனைவி உயிரிழப்பு.  அவரின் தற்கொலை கடிதம் கிடைத்துள்ளது. சென்னை பள்ளிக்கரணையைச் சேர்ந்த சர்மிளா எனும் மூன்றாம் ஆண்டு கல்லூரி…

2 hours ago

தெலுங்கு பாட்டே வேண்டாம்! கில்லி படத்தில் சொல்லி அடித்த வித்யாசாகர்!

Ghilli : கில்லி படத்தில் பாடல்கள் எல்லாம் ஹிட் ஆகும் என தயாரிப்பாளரிடம் வித்யாசாகர்  உறுதியாக கூறி செய்து காட்டியுள்ளார். தெலுங்கில் மகேஷ் பாபு  நடிப்பில் வெளியாகி…

2 hours ago