பாஜக தலைவர்கள் ஓபிஎஸ், இபிஎஸ் இருவரையும் சந்திக்க வேண்டிய தேவை என்ன? – ஜோதிமணி எம்.பி

பாஜக தலைவர்கள் ஓபிஎஸ்,இபிஎஸ் இருவரையும் சந்திக்க வேண்டிய தேவை என்ன? நடப்பது அதிமுகவின் உள்கட்சி விவகாரம் அல்லவா? என ஜோதிமணி எம்.பி ட்வீட். 

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள், ஈபிஎஸ், ஓபிஎஸ்-ஐ தனித்தனியே சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போது, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரான திருமதி திரௌபதி முர்மு அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்யும் பொழுது கலந்துகொள்ளுமாறு தெரிவித்துள்ளனர்.

இந்த சந்திப்பின் போது, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, சி.டி.ரவி ஆகியோர் உடனிருந்தனர். இந்த நிலையில் இந்த சந்திப்பு குறித்து, ஜோதிமணி எம்.பி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘அதிமுக பொதுக்குழு முடிந்ததும் பாஜக தலைவர்கள் ஓபிஎஸ்,இபிஎஸ் இருவரையும் சந்திக்க வேண்டிய தேவை என்ன? நடப்பது அதிமுகவின் உள்கட்சி விவகாரம் அல்லவா?’ என பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment