குரூப் 4 தேர்வுக்கு குறைந்தபட்ச கல்வி தகுதி என்ன – உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி!

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் நடந்ததும் பிரிவு 4 என்னும் குரூப் 4 தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி என்ன என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி கேட்டுள்ளது. மேலும் 12 வாரங்களுக்கு குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச கல்வி தகுதியை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று செய்தி முதன்மை நிர்வாகத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

 

கூடுதல் கல்வித்தகுதி இருப்பதாக கூறி, எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற ஒருவரை நேர்முகத்தேர்வில் இருந்து நிராகரிக்கப்பட்டதாக கூறி ஒருவர் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழகை இன்று விசாரித்த நீதிபதி, உயர் கல்வித்தகுதி உடையவர்கள் சரியாக வேலை பார்ப்பது இல்ல என்றும் உயர் அதிகாரிகள் அவர்களிடம் வேலை வாங்க பல சிரமங்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.]

எனவே, குரூப் 4 மற்றும் குரூப் 3 ஆகிய பணியிடங்களுக்கு குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச கல்வி தகுதி என்ன என்பதை 12 வாரங்களுக்குள் தெரிவிக்க வேண்டும் உத்தரவிட்டுள்ளார்.