நமது நிலத்தை திரும்பபெற மத்திய அரசு என்ன செய்யப்போகிறது..? – ராகுல் காந்தி

சீனர்கள் ஆக்கிரமித்த நமது நிலத்தை திரும்பபெற மத்திய அரசு என்ன செய்யப்போகிறது.? என்று ராகுல் காந்தி ட்வீட்.

கொரோனா பரவல், பொது முடக்கம் மற்றும் நாட்டின் பொருளாதார இழப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் மத்திய அரசின் செயல்பாடுகளை விமர்சித்து காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி அவரது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து வருகிறார். இதற்கு மத்தியில் சில மாதங்களாக இந்திய எல்லையான லடாக் எல்லைப்பகுதியில் சீன ராணுவம் அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது. அதுவும் சீன ராணுவம் நமது நிலங்களை ஆக்கிரமித்து பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்து வருகிறது. இதனால் அப்பகுதியில் இந்திய மற்றும் சீனா தங்களது ராணுவ படைகளை குவித்து வருகிறது.

இருதரப்பு அமைதி பேச்சுவார்த்தை நடத்தியும், அசாதாரண சூழல் நிலவு வருகிறது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அவரது ட்விட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்ட பதிவில், எல்லையில் சீனா அத்துமீறலில் ஈடுபட்டது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். அதாவது, சீனர்கள் ஆக்கிரமித்த நமது நிலத்தை திரும்பபெற மத்திய அரசு என்ன செய்யப்போகிறது என்றும் அதுவும் கடவுளின் செயல் என விட்டு விடப்போகிறதா மத்திய அரசு? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்