சிவராத்திரி என்றால் என்ன….?

சிவராத்திரி என்றால் என்ன….?

  • சிவராத்திரி என்பது பல கல்பகோடி இரவுகள் சேர்ந்து வந்த ராத்திரியை தான் சிவராத்திரி என்று கூறுகின்றனர்.
  • மகா சிவராத்திரியன்று கண்விழித்து சிவனை வணங்கினால், நாம் செய்த அத்தனை பாவங்கள் கரைந்துவிடும்.

சிவராத்திரி என்பது பல கல்பகோடி இரவுகள் சேர்ந்து வந்த ராத்திரியை தான் சிவராத்திரி என்று கூறுகின்றனர். இந்த ராத்திரியில் பூஜை செய்தால் பல இரவுகளிலும் செய்கின்ற பூஜையின் பலனை சிவராத்திரி பூஜை ஒன்றே கொடுத்துவிடும் என்று சித்தர்கள் கூறுகின்றனர்.

இது குறித்து சிவனடியார் கூறுகையில், இதில் வரும் இரவுகள் அனைத்திலும் அன்னை பராசக்தி ஈசனை பூஜை செய்திருக்கிறாள். தொடர்ந்து 12 சிவராத்திரி இரவுகளில் அண்ணாமலை கிரிவலம் சென்றால், நமது கர்ம வினைகள் அனைத்தும் கரைந்து காணாமல் போய்விடும் என்று  கூறியுள்ளனர்.

இது குறித்து சித்த ரகசியம் என்ன கூறுகின்றது என்றால், மகா சிவராத்திரியன்று கண்விழித்து சிவனை வணங்கினால், நாம் செய்த அத்தனை பாவங்களும் நம்மை விட்டு கரைந்து காணாமல் போய்விடும் என்றும், அடுத்த மூன்று ஆண்டுகளில் நாம் எதிர்பார்க்கும் அளவிற்கு மகத்தான செல்வ வளம் நம்மை வந்து சேரும் கூறப்படுகிறது.

விரதம் கடைப்பிடிப்போர் முதல் ஒருநாள் ஒரு பொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமாய் காலையில் குளித்து சிவ சிந்தனையுடன் கண்விழித்திருந்து நான்கு யாம வழிபாடு செய்யவேண்டும்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *