இது என்னய்யா ரூல்ஸ்? ஐசிசி-யை சாடிய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள்!

இது என்னய்யா ரூல்ஸ்? ஐசிசி-யை சாடிய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள்!

நேற்றைய  இறுதிப்போட்டியில் இங்கிலாந்து , நியூஸிலாந்து அணிகள் லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் மோதியது .முதலில் இறங்கிய நியூஸிலாந்து அணி 50 ஓவரில் 8 விக்கெட்டை  பறிகொடுத்து  241 ரன்கள் எடுத்தது.

பின்னர் 242 ரன்கள் இலக்குடன் களமிங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 241 ரன்கள் எடுத்தது இதனால் இப்போட்டி டையில் முடிந்தது.பிறகு  சூப்பர் நடத்தப்பட்டது. சூப்பர் ஓவரில் இங்கிலாந்து அணி 15 ரன்கள் அடித்தது.

பின்னர் 16 ரன்களுடன் இறங்கிய நியூஸிலாந்து அணி 15 ரன்கள் அடித்ததால் சூப்பர் ஓவர்  போட்டியும்  டை ஆனது. இதனால் இறுதி போட்டியில் அதிக பவுண்டரி அடித்த அணிக்கு  வெற்றி என அறிவிக்கப்பட்டது. அதன் படி நியூஸிலாந்து அணியை விட இங்கிலாந்து அணி ஆறு பவுண்டரி அதிகமாக  அடித்து இருந்ததால் இங்கிலாந்து அணி கோப்பையை கைப்பற்றியது.

இந்நிலையில்  பவுண்டரி அடிப்படையில் இங்கிலாந்து அணிக்கு  கோப்பையை கொடுத்ததால் பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ஐசிசியை சாடி உள்ளனர்.

இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைப் ,அதிக பவுண்டரி விதியை ஜீரணிப்பது கடினம் மீண்டும் ஒரு ஓவர் வைத்து எந்த அணி வெற்றி பெரும் என்பதை பார்த்த பிறகு வெற்றி கொடுத்து இருக்கலாம்.பவுண்டரி அடிப்படையில் வெற்றியை கொடுத்தற்கு பதிலாக கோப்பையை பகிர்ந்து கொடுத்து இருக்கலாம் அதுவே சிறப்பாக இருந்திருக்கும் என கூறினார்.

இந்திய அணியின் தொடக்க முன்னாள் வீரர் கௌதம் காம்பீர் கூறுகையில் , இப்படி ஒரு முடிவுக்கு  எப்படி வந்தார்கள் என்பது தெரியவில்லை.கடைசிவரை விளையாடிய இரு அணிகளுக்கும் வெற்றிதான் என ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார்.

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் பந்து வீச்சாளர் பீரெட்லீ   வெற்றிபெற்ற அணியை தேர்ந்தெடுக்க எடுக்கப்பட்ட இந்த முடிவு பயங்கரமானது.எனவே இந்த விதியை மாற்ற வேண்டும் என கூறினார்.

நியூஸிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீபன் பிளபிங் ,இந்த முடிவு கொடூரமானது என கருத்து தெரிவித்து உள்ளார்.

 

author avatar
murugan
Join our channel google news Youtube