என்னது., இமானுக்கு இரண்டாவது திருமணம் முடிஞ்சதா.?! சொல்லவே இல்ல..

தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளரான டி.இமான் தற்போது பல திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார். சமீபத்தில் கூட இவரது இசையில், சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது.

இவர் சமீபத்தில் தனது முதல் மனைவி மோனிகாவை விவாகரத்து செய்திருந்தார். இந்த நிலையில், அதனை தொடர்ந்து டி.இமான் சென்னையை சேர்ந்த ஒரு பெண்ணை மறுமணம் செய்வதாக கடந்த சில நாட்களாகவே  தகவல்கள் பரவி வந்தது

இதனையடுத்து, நேற்று டி.இமான் மறுமணம் செய்துகொண்டுள்ளதாக ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. மணமகளின் பெயர் எமிலி என்றும், இவர் பிரபல கலை இயக்குனர் உபால்டுவின் மகள் எனவும் தகவல் தெரிவிக்கின்றனர்.

இந்த மறுமணத்திற்கு நெருங்கிய குடும்பத்தினர்களை மட்டும் அழைத்து அவர்களது முன்னிலையில், திருமணம் நடைபெற்றுள்ளது. இதனை தொடர்ந்து டி.இமானுக்கு சினிமா பிரபலங்கள் மற்றும், ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here