ஆக்ரோஷமாக எரிந்த தீயில் 7,000 கோழிகள் கருகி நாசம்..நடந்தது என்ன?

வேலூர் மாவட்டம் சிதம்பரம் என்பவருக்கு சொந்தமான இரண்டு கோழிப் பண்ணைகளில் இருந்த 7,000 கோழிகள் தீயில் கருகி உயிரிழப்பு .

வேலூர் மாவட்டம் கே.வி குப்பம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த சிதம்பரம் என்பவருக்கு சொந்தமான கோழிப் பண்ணையில் நேற்று இரவு நேரத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சிதம்பரத்துக்கு சொந்தமான இரண்டு கோழிப் பண்ணைகள் மற்றும் கோழி உண்ணும் தீவனம் உள்ளிட்ட பொருட்கள்தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. தீ எரிந்ததை கண்டு அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு துறையினர் மற்றும் வி.கே வி குப்பம் காவல்துறைக்கு தகவல் அளித்தனர் .

தகவலறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பரப்பாக இரண்டு மணி நேரமாக போராடிய பிறகு தீயை அணைத்தனர். ஆனால் அந்த விபத்தில் பண்ணையில் இருந்த 7,000 கோழிகள் பரிதாபமாக தீயில் கருகி உயிரிழந்தது மேலும் பண்ணைகளில் இதர பொருட்களும் எரிந்து வீணாகியது கோழிப்பண்ணைக்கு ஏற்பட்ட இந்த தீ விபத்து குறித்து கே.வி குப்பம் மாவட்டம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.