ஆ.ராசா என்ன பெரிய ஆளா? ஒரு சாதாரண ஆளு! – முதல்வர் பழனிசாமி

ஆ.ராசா என்ன பெரிய ஆளா? அவரு கூப்பிட்டதும் நான் போறதுக்கு, அவரு ஒரு சாதாரண ஆளு. திமுகவுக்கு வேண்டுமென்றால் ஆ.ராசா பெரிய ஆளாக தெரியலாம்.  

2 ஜி ஊழலை கடந்த சில நாட்களாக, திமுக மற்றும் அதிமுக கட்சியை இடையே வார்த்தை போர் நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை, ஆ.ராசா விவாதத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ஆ.ராசா என்ன பெரிய ஆளா? அவரு கூப்பிட்டதும் நான் போறதுக்கு, அவரு ஒரு சாதாரண ஆளு. திமுகவுக்கு வேண்டுமென்றால் ஆ.ராசா பெரிய ஆளாக தெரியலாம். தங்களுக்கு அவர் ஒன்றும் கிடையாது எனவும்  தெரிவித்துள்ளார்.

திமுகவின் செலவுக்கு அவ்வப்போது பணம் தேவைப்படுவதால், கட்சியைவிட்டு அனுப்பாமல் இன்னும் வைத்துள்ளதாகவும், ஆரம்ப காலத்தில் ராசா எப்படி இருந்தார் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும், எப்படி இருக்கிறார் என்பதையும், அவர் என்ன காரில் பயணிக்கிறார் என்பதை மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்றும், ராசாவின் பின்புலத்தை எடுத்தால், அவரது சுயரூபம் தெரிய வரும் என்று தெரிவித்துள்ளார்.