எனக்கு எதற்கு விளம்பரம்?- முதலமைச்சர் ஸ்டாலின்

எனக்கு எதற்காக விளம்பரம், இனிமேலும் எனக்கு விளம்பரம் தேவையா? 55 ஆண்டுகாலம் அரசியலில் இருக்கக்கூடியவன் நான். இதற்கு மேல் எதற்கு எனக்கு விளம்பரம்? என முதல்வர் கேள்வி.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தை திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து  முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நிகழ்வில் உரையாற்றிய அவர், அமைச்சர் காந்தி அவர்களை புகழ்ந்து பேசினார். அப்போது  ராணிப்பேட்டை என்பதை விட காந்தி பேட்டை என்று சொன்னால் கூட பொருத்தமாக இருக்கும். அந்த அளவிற்கு அமைச்சர் காந்தி எப்போதும் தான் இருக்கும் இடத்தை கலகலப்பாக வைத்திருப்பார் என்று தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து திமுக ஆட்சி காலத்தில் செய்து முடிக்கப்பட்ட  நிறைவுற்ற பணிகளை மு.க.ஸ்டாலின் அவர்கள் பட்டியலிட்டு கூறினார். தேர்தல் வாக்குறுதிகளில் கூறிய 70 முதல் 80 சதவீத வாக்குறுதிகள் நிறைவேறப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக தான் மக்கள் முன்பு கம்பீரமாக நின்று பேசிக்கொண்டே இருக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருந்துவிடும் என்பது போல எதிர்க்கட்சிகள் பேசி வருகின்றனர். ஸ்டாலின் விளம்பர பிரியராக இருக்கிறார் என்று கூறுகிறார்கள். எனக்கு எதற்காக விளம்பரம், இனிமேலும் எனக்கு விளம்பரம் தேவையா? 55 ஆண்டுகாலம் அரசியலில் இருக்கக்கூடியவன் நான். இதற்கு மேல் எதற்கு எனக்கு விளம்பரம்? என கேள்வி எழுப்பிவுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.