, ,

பிஸ்தாவை அதிகமாக சாப்பிட்டால் இத்தனை பாதிப்புகளா?

By

ஆரோக்கியம் தரும் பிஸ்தா கூட அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் உடலில் பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.

   
   

பொதுவாக நட்ஸ் வகைகளில் மிகவும் முக்கிய அம்சம் கொண்டது இந்த பிஸ்தா. நாம் சாப்பிடும் இனிப்பு பலகாரங்கள் ஆக இருந்தாலும் சரி, சாக்லேட், ஐஸ்கிரீம், மிட்டாய் என பல்வேறு உணவுகளில் அலங்காரத்திற்காகவும் சுவைக்காகவும் ஆரோக்கியத்திற்காகவும் பிஸ்தா சேர்க்கப்படுகிறது. ஆனால் இந்த இதனையும் நாம் அதிகமாக உட்கொண்டோமேயானால் பல்வேறு உடல் பாதிப்புகள் நாம் சந்திக்க நேரிடும். இதை அதிகமாக சாப்பிட்டால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

எடை: பிஸ்தாவை அதிகமாக நீங்கள் சாப்பிடுகிறீர்கள் என்றால் உங்களுடைய எடை அதிகரிப்பிற்கு இதுவே ஒரு முக்கிய காரணமாக இருக்கும். ஏனென்றால் தினமும் பிஸ்தா சாப்பிடுபவர்களின் உடல் எடை நிச்சயம் அதிகரிக்கும். நீங்கள் உடல் எடையைக் குறைக்க நினைக்கிறீர்கள் என்றால் பிஸ்தாவின் அளவை குறைத்துக்கொள்வது மிகவும் நல்லது.

செரிமானம்: பிஸ்தாவில் நார்ச்சத்து இருக்கிறது. இது நமது வயிற்றிற்கு மிகவும் நன்மை அளிக்கும். அதே போல இரைப்பை குடல் ஆரோக்கியத்திற்கும் இது உதவியாக இருக்கும். ஆனால் பிஸ்தாவில் அதிக அளவில் நார்ச்சத்து இருக்கிறது. இதன் காரணத்தினால் வயிற்றுவலி ஏற்படும். வயிற்றுப்போக்கு ஏற்படவும் அதிக வாய்ப்புகள் உள்ளது. அதனால் ஆரோக்கியம் தரும் என்றாலும் அளவோடு சாப்பிடுவது மிகவும் நன்மை தரும்.

சிறுநீரகம்: பிஸ்தாவில் பொட்டாசியம் அதிகமாக இருக்கிறது. சிறுநீரகத்தை அதிகமான பொட்டாசியம் நிச்சயமாக பாதிக்கும். அதனால் சிறுநீரகப் பிரச்சினைகள் இருப்பவர்கள் பிஸ்தாவை உணவில் எடுத்துக் கொள்வதை குறைத்துக்கொள்வது மிகுந்த நன்மை அளிக்கும். பிஸ்தா சாப்பிடுவதன் காரணமாக உடலில் பலவீனம் ஏற்படும். குமட்டல் ஏற்படும், இதயத் துடிப்பு சீராக இயங்காமல் இருக்கும். இதுபோன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

ரத்த அழுத்தம்: கடைகளில் பெரும்பாலான பிஸ்தாக்கள் உப்பு சேர்த்து வறுக்கப்பட்டவையாக இருக்கும். அதனால் அந்த பிஸ்தாக்களில் சோடியம் அதிகமாக இருக்கிறது. இதனை நாம் அளவுக்கு அதிகமாக உட்கொள்ளும் பொழுது இருதய பிரச்சனை ஏற்படுத்த காரணமாக அமையும். மேலும் உயர் ரத்த அழுத்தமும் இதனால் ஏற்படும் அபாயம் உள்ளது.

கோபம்: பிஸ்தாவின் தன்மைகள் மிகவும் சூடானதாகவும், உலர்ந்ததாகவும் இருக்கும். அதனால் பொதுவாகவே கோபம் அதிகமாக வருபவர்களுக்கு சூடான பொருட்களை உட்கொள்வதை தவிர்த்துக் கொள்வது நல்லது. அதனால் பிஸ்தாவை அதிகமாக உட்கொண்டு வந்தீர்கள் என்றால் கோபம் மேலும் அதிகரிக்குமே தவிர குறைய வாய்ப்பில்லை.

சிறுநீரகக் கல்: பிஸ்தாவில் இருக்கக்கூடிய அதிகப்படியான பொட்டாசியம் காரணமாக சிறுநீரகத்தில் பாதிப்புகளை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் இதில் இருக்கக்கூடிய ஆக்சைடுகள் மற்றும் மெத்தியோனைன், கால்சியம் ஆக்சலேட் ஏற்படுவதை ஊக்குவிக்கிறது. இதுவே சிறுநீரக கற்களின் முதன்மையான கூறுகளில் ஒரு படி ஆகும். அதனால் பிஸ்தாவை அதிகமாக உட்கொள்வது சிறுநீரகக்கல் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது.

இரைப்பை: பிஸ்தாவில் இருக்கக்கூடிய முக்கியமான அங்கங்களில் ஒன்று பிரக்டான். இந்த பிரக்டான் பெரும்பாலும் தீங்கு விளைவிப்பதில்லை. ஆனால் பல பேருக்கு இது அழற்சி ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த அலர்ஜியின் தீவிரம் சிறியதாகவும் இருக்கலாம், அதிகமாகவும் இருக்கலாம். இதன் காரணத்தினால் பிஸ்தாவை அதிகமாக உட்கொள்வதை தவிர்த்துக் கொள்வது நல்லது.

ஆரோக்கியம் தரும் பொருளாக இருந்தாலும் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதை நாம் அறிந்துள்ளோம். அதன் காரணத்தினால் அளவோடு ஆரோக்கியம் தரும் உணவுகளை உட்கொண்டு நலமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.

Dinasuvadu Media @2023