அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 16 தீர்மானங்கள் என்னென்ன.?

அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் 16 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 16 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், அதிமுக பொதுக்குழுவில் வழிகாட்டுதல் குழுவுக்கு ஒப்புதல் அளித்து தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதில், 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவில் இடம் பெற்றவர்களின் பெயரை முதல்வர் அறிவித்தார். திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம் , காமராஜ், ஜேசிடி பிரபாகரன், மனோஜ் பாண்டியன், மோகன்,கோபல கிருஷ்ணன் மற்றும் சோழவந்தான் மாணிக்கம் ஆகியோர் இடம்பெற்றனர் என்பது குறிப்பிடப்படுகிறது.

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 16 தீர்மானங்கள்:

  1. ஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைக்க இருக்கும் தமிழக அரசுக்கு நன்றி.
  2. முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவித்ததை ஏகமனதாக ஏற்கிறோம்.
  3. கொரோனா பெருந்தொற்றில் இருந்து மக்களை காப்பாற்ற இலவச தடுப்பூசி போடப்படும் என்ற முதல்வரின் அறிவிப்புக்கும், மத்திய அரசுக்கும் நன்றி.
  4. இந்திய – இலங்கை ஒப்பந்தத்தில் கூறப்பட்ட மாகாணசபை முறை ரத்து செய்ய செய்யப்படுவதை தடுக்க மத்திய அரசுக்கு வலியுறுத்தல்.
  5. தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப்பணியில் 20 விழுக்காடு முன்னுரிமை மற்றும் டிஜிட்டல் இந்தியா – தங்க விருதினையும், கோவில் மேலாண்மை திட்டத்திற்கு எடுத்துக்காட்டான மென்பொருள் தயாரித்தமைக்கும் வெள்ளி விருதினை பெற்றிருக்கும் கழக அரசுக்கு பாராட்டு.
  6. உலக அளவில் முதலீட்டாளர்களை ஈர்த்து தொழில் வளர்ச்சிக்கு ஊக்கமளித்து வேலைவாய்ப்புகளை உருவாக்கிய அரசுக்கு பாராட்டு.
  7. தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் இடங்களில் அம்மா மினி கிளினிக்குகள் திறக்க நடவடிக்கை எடுத்ததற்கு பாராட்டு.
  8. நகர்ப்புற வீட்டுவசதி திட்டத்தில் பயனடையும் 6 மாநிலங்களில் இன்றாக தமிழகத்தை இணைத்த பிரதமருக்கும், தமிழக அரசுக்கும் பாராட்டு.
  9. 7.5% இடஒதுக்கீட்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்வி வழங்கி, படிப்பு செலவை ஏற்ற தமிழக அரசுக்கு பாராட்டு.
  10. நிவர் மற்றும் புரெவி புயல்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் கோடி நிவாரணம் அளித்த தமிழக அரசுக்கு பாராட்டு.
  11. தமிழக மக்கள் அனைவரும் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாட ரூ.2500 மற்றும் பரிசு தொகுப்பு வழங்கும் அரசுக்கும் பாராட்டு.
  12. நாட்டிலேயே மிகசிறந்த மாநிலங்களில், முதலிடம் பெற்ற மாநிலமாக தமிழ்நாடு தேர்தெடுக்கப்பட்டு பல்வேறு விருது பெற்றதற்கு முதல்வர், துணை முதல்வருக்கு பாராட்டு.
  13. தமிழ்நாட்டு மக்களுக்கு கடந்த 4 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றியமைக்கு கழக அரசுக்கு பாராட்டு.
  14. மக்கள் மத்தியில் பெருகிவரும் ஆதரவை பொறுக்க முடியாமல் முதல்வர் பழனிசாமியை பக்குவமின்றி விமர்சித்து வரும் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் திமுகவினருக்கு கண்டனம்.
  15. கூட்டணியை இறுதி செய்ய ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோருக்கு முழு அதிகாரம் வழங்கி தீர்மானம்.
  16. தமிழகத்தில் தீய சக்திகள் தலைதூக்குவதை முறியடித்து ஒரே குடும்பத்தில் ஏகபோக வாரிசு அரசியலை வீழ்த்தி,பேரறிஞர் அண்ணாவும், புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரும் கனவு கண்டவாறு உண்மையான ஜனநாயகம் தழைக்க தீர்மானம்.
author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்