கள்ளத்தொடர்பால் 40 வயதுடைய நபருக்கு ஏற்பட்ட பரிதாபம்!கள்ளக்காதலி செய்த வெறிச்செயல்!

கள்ளத்தொடர்பால் 40 வயதுடைய நபருக்கு ஏற்பட்ட பரிதாபம்.கள்ளக்காதலி செய்த

By sulai | Published: Jan 26, 2020 07:51 PM

  • கள்ளத்தொடர்பால் 40 வயதுடைய நபருக்கு ஏற்பட்ட பரிதாபம்.கள்ளக்காதலி செய்த வெறிச்செயல்.
  • குற்றவாளியை கைது செய்து சிறையில் அடைத்த காவல்துறையினர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சிங்காரப்பேட்டை அருகே அமைத்துள்ள கோவிந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் திருப்பதி ஆவார்.சுமார் 40 வயதாகிய இவர் சமீபகாலமாக கேரள மாநிலத்தில் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார். அப்போது திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த மைதிலி என்ற பெண்ணுக்கும் திருப்பதிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் இருவரும் மது பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளனர். இதனால் திருப்பதி மைதிலியை தமது சொந்த ஊருக்கு அழைத்து வந்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.மைதிலி மது பழக்கத்திற்கு தீவிரமாக அடிமையானதை உணர்ந்த திருப்பதி அவரை மீட்டெடுக்க முடிவெடுத்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். ஆனாலும் மைதிலியின் குணங்களில் எந்த வித மாற்றமும் ஏற்படவில்லை.இதன் காரணமாக சரி செய்ய முடியாது என்ற எண்ணத்தில் அந்த முயற்சியை விட்டுள்ளார்.பின்னர் வேலைக்காக கேரளா சென்றுள்ளார். பின்னர் திருப்பதி கேரளாவிற்கு சென்ற பிறகு மது வாங்கி தருமாறு கைபேசியில் தொடர்பு கொண்டு மைதிலி வற்புறுத்தியுள்ளார்.இந்நிலையில் மைதிலிக்கு அதே பகுதியை சேர்ந்த வேறொரு நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இருவரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்த தொடங்கியுள்ளனர்.இந்நிலையில் திருப்பதி மைதிலியை காண கேரளாவில் இருந்து வந்துள்ளார்.அப்போது மைதிலியும் அந்த நபரும் சேர்ந்து மது அருந்துவதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனால் திருப்பதிக்கும் மைதிலிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.இதனால் ஆத்திரம் அடைந்த மைதிலி மது பாட்டிலை எடுத்து திருப்பதியின் கழுத்தில் குத்தி கொலை செய்துள்ளார். பின்னர் திருப்பதியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.பின்னர் சம்பவம் குறித்து காவல்துறையினர் தகவல் அளித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த காவல்துறையினர் மைதிலியையும் அவருடன் சேர்ந்து மது அருந்திய நபரையும் கைது செய்துசிறையில் அடைத்துள்ளனர்.இந்நிலையில் திருப்பதி மேல்சிகிச்சைக்காக தர்மபுரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
Step2: Place in ads Display sections

unicc