இரண்டாவது வெற்றியை நோக்கி மோத உள்ள வெஸ்ட் இண்டீஸ் Vs பங்களாதேஷ்!

இரண்டாவது வெற்றியை நோக்கி மோத உள்ள வெஸ்ட் இண்டீஸ் Vs பங்களாதேஷ்!

இன்றைய போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி Vs பங்களாதேஷ் அணி மோத உள்ளது.இப்போட்டி  டவுன்டனில் உள்ள கூப்பர் அசோசியேட்ஸ் கவுண்டி மைதானதில் நடைபெற உள்ளது. இப்போட்டியை இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கவுள்ளது.
நடப்பு உலகக்கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் அணி நான்கு போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்று உள்ளது.இரண்டு போட்டியில் தோல்வியடைந்து உள்ளது.ஒரு போட்டி மழை காரணமாக ரத்தானது.இதன் மூலம் புள்ளி பட்டியலில் 3 புள்ளிகளை பெற்று உள்ளது.
பங்களாதேஷ் அணி அணியும் விளையாடிய நான்கு போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்று உள்ளது.இரண்டு போட்டியில் தோல்வியடைந்து உள்ளது.ஒரு போட்டி மழை காரணமாக ரத்தானது.இதன் மூலம் புள்ளி பட்டியலில் 3 புள்ளிகளை பெற்று உள்ளது.
இரண்டு அணிகளுமே ஒரே  புள்ளிகளை கொண்டு உள்ளது.இன்று இந்த இரு அணிகளும் தங்களது இரண்டாவது வெற்றியை நோக்கி மோத உள்ளனர்.
 

author avatar
murugan
Join our channel google news Youtube