நிக்கோலஸ் சதம் வீணானது!23 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையிடம் தோற்ற வெஸ்ட் இண்டீஸ்!

நேற்றைய போட்டியில் இலங்கை அணியும் , வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதியது . இப்போட்டி  செஸ்டர்-லெ-ஸ்ட்ரீட்ரில் உள்ள ரிவர்சைடு மைதானத்தில் நடைபெற்றது . இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

முதலில் இலங்கை அணியில் தொடக்க வீரர்களாக திமுத் கருணாரத்ன , குசல் பெரேரா இருவரும் களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்திலே இருந்து நிதானமாக விளையாடிய இருவரும் ரன்களை சேர்த்தனர்.

 நிதானமாக விளையாடி வந்த திமுத் கருணாரத்ன 15 -வது ஓவரில் 32 ரன்களுடன் வெளியேறினர்.பின்னர் அவிஷ்கா களமிறங்கினர்.சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த குசல் பெரேரா அரை சதத்தை நிறைவு செய்து 51 பந்தில் 64 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

அதன் பின்னர் அடுத்தடுத்து களமிறங்கிய அதிரடியாக விளையாடி குசால் மெண்டிஸ் 39 , ஏஞ்சலோ மேத்யூஸ் 26 ரன்களுடன் வெளியேறினர். நிதானமாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அவிஷ்கா 103 பந்தில் 104 ரன்கள் குவித்தார்.

இறுதியாக இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 338 ரன்கள் குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சில் கேப்டன் ஜேசன் ஹோல்டர் இரண்டு விக்கெட்டைபறித்தார் .

339 ரன்கள் இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணியில் தொடக்க வீரர்களாக கிறிஸ் கெய்ல் , சுனில் அம்ப்ரிஸ் இருவருமே களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்திலே வரிசையாக அடுத்தடுத்து  சுனில் அம்ப்ரிஸ் , ஷாய் ஹோப்  இருவருமே 5 ரன்னில் வெளியேறினர்.

பின்னர் களமிறங்கிய ஷிம்ரான் ஹெட்மியர் களமிறங்கினர். சிறப்பாக விளையாடி வந்த கிறிஸ் கெய்ல் 35 ரன்னில் அவுட் ஆகி வெளியேற நிக்கோலஸ் பூரன் இறங்கினர்.ஹெட்மியர் , நிக்கோலஸ் இருவரின் கூட்டணியில் அணியின் ரன்களை உயர்த்தினர்.

ஹெட்மியர் 18 ஓவரில்  தனஞ்சய டி சில்வா செய்த ரன் அவுட்டில் வெளியேறினர்.வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிரடியாகவும் ,மிக சிறப்பாகவும் விளையாடி வந்த நிக்கோலஸ் பூரன் 103 பந்தில் 118 ரன்கள் குவித்தார்.

இறுதியாக வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர் முடிவில் 315 ரன்கள் அடித்து 9 விக்கெட்டை இழந்து 23 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வியடைந்தது. இலங்கை அணி பந்து வீச்சில் மலிங்கா 2 விக்கெட்டை பறித்தார்.

author avatar
murugan