mamta banarjee

West Bengal: மேற்கு வங்க எம்எல்ஏக்கள், அமைச்சர்களுக்கு ரூ.40,000 ஊதிய உயர்வு – முதல்வர் அறிவிப்பு

By

மேற்கு வங்க மாநில எம்எல்ஏக்களின் சம்பளம் மாதம் ரூ.40,000 உயர்த்தப்படுவதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி இன்று நடைபெற்ற சட்டசபையில் அறிவித்தார். மொத்தம் 294 சட்டசபை தொகுதிகளை கொண்ட மேற்குவங்கத்தில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. அம்மாநில முதலமைச்சராக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி செயல்பட்டு வருகிறார்.

இவர் கடந்த 2011 முதல் தொடர்ந்து 3வது முறையாக மேற்கு வங்க மாநில முதல்வராக செயல்பட்டு வருகிறார். எனவே, ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு 220 எம்எல்ஏக்களும், கூட்டணி கட்சியான பிஜிபிஎம் கட்சிக்கு ஒரு எம்எல்ஏ, எதிர்க்கட்சியாக உள்ள பாஜகவுக்கு மொத்தம் 69 எம்எல்ஏக்கள் மற்றும் பிற கட்சிகளான காங்கிரஸ் மற்றும் ஐஎஸ்எப் கட்சிக்கு தலா ஒரு எம்எல்ஏக்களும், 2 தொகுதி காலியாகவும் உள்ளன.

இந்த நிலையில், மேற்குவங்கத்தில் சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை அம்மாநில முதலமைச்சர் வெளியிட்டு வருகிறார். அதன்படி, இன்று நடைபெற்ற சட்டசபை கூட்டத்தொடரில் பேசிய மம்தா பானர்ஜி, எம்எல்ஏக்கள், மாநில அமைச்சர்கள் மற்றும் கேபினட் அமைச்சர்களின் மாதச் சம்பளத்தை ஒவ்வொரு பிரிவினருக்கும் ரூ.40,000 உயர்த்துவதாக அறிவித்தார்.

அதாவது, மேற்கு வங்கங்கத்தில் எம்எல்ஏக்களுக்கான மாத ஊதியத்தை மேலும் ரூ.40,000 உயர்த்தி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிற மாநில எம்எல்ஏக்களை விட குறைவாக இருப்பதால் மேற்குவங்க எம்எல்ஏக்களுக்கு ஊதிய உயர்வு என அம்மாநில முதல்வர் விளக்கமளித்தார். ஏற்கனவே மேற்குவங்க எம்எல்ஏக்கள் ரூ.81,000 மாத ஊதியம் பெற்று வந்த நிலையில், தற்போது ரூ.1.21 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இதனால் எம்எல்ஏக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுபோன்று அமைச்சர்களின் மாத ஊதியம் ரூ.1.10 லட்சத்தில் இருந்து ரூ.1.50 லட்சமாகவும் உயர்த்தி வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். முதல்வரின் சம்பளத்தில் எந்த மாற்றமும் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. மேற்கு வங்க மாநிலத்தை பொறுத்தவரையில் கேபினட் அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு மாத சம்பளம், அலோவன்ஸ்கள் என 3 வகைகளில் வழங்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Dinasuvadu Media @2023