மேற்கு வங்க பஞ்சாயத்து தேர்தல் விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு கல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவு.
மேற்கு வங்கத்தில் பஞ்சாயத்து தேர்தலுக்காக ஹவுரா மாவட்டத்தின் உலுபெரியா தொகுதியில் ஜூலை 8-ம் தேதி வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. அதில் தாங்கள் தாக்கல் செய்த வேட்புமனுவில் பஞ்சாயத்து தேர்தல் நடத்தும் அதிகாரி குளறுபடி செய்ததாக, வேட்புமனு தாக்கல் செய்த இரண்டு மனுதாரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக நடைபெற்ற விசாரணையில், இரு வேட்பாளர்களும் ஓபிசி-ஏ பிரிவைச் சேர்ந்தவர்கள். ஆனால், பஞ்சாயத்து தேர்தல் அதிகாரியின் ஆவணங்களில் எஸ்சி-டபிள்யூ பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று குறிப்பிடப்பட்டதாக, மனுதாரர்களின் வழக்கறிஞர் சப்யசாசி சாட்டர்ஜி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடர்பாக நடந்த வன்முறை சம்பவங்கள் குறித்து சிபிஐ விசாரணைக்கு கல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டை ஜூலை 5ம் தேதிக்குள் விசாரித்து, ஜூலை 7ம் தேதி நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சிபிஐ இணை இயக்குனருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.