மேற்குவங்க 8-ம் கட்ட தேர்தல் : 9:30 நிலவரப்படி 6%-க்கும் அதிகமான வாக்குபதிவு…!

மேற்கு வங்கத்தில், இன்று காலை 9:31 மணிவரை 6 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

மேற்கு வங்கத்தில் சட்டமன்ற தேர்தல் 8 கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று எட்டாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. 35 தொகுதிகளில் இன்று எட்டாம் கட்ட தேர்தல் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது.

இந்த இறுதி கட்ட தேர்தலில், 283 வாக்காளர்கள் களத்தில் உள்ள நிலையில், இவர்களது வெற்றி, தோல்வியை 84,77,728 வாக்காளர்கள் தீர்மானிக்கவுள்ளனர். 43,55,835 ஆண்கள், 41,21,735 பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தில் 158 பேர் வாக்களிக்க தகுதியுடையவர்கள் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.  மொத்தம் 11,860 வாக்குச்சாவடிகளில் காலை மணிக்கே வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், 6:30 மணிக்கு நிறைவுபெறும். தொடர்ந்து வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்ற நிலையில், இன்று காலை 9:31 மணிவரை 6 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.