வாக்குறுதிகள் எடுபட்டதா..? என்பது தேர்தல் முடிவில் தெரியும்..முதல்வர்..!

வாக்குறுதிகள் எடுபட்டதா..? என்பது தேர்தல் முடிவில் தெரியும்..முதல்வர்..!

அதிமுக தேர்தல் அறிக்கை எடுபடுமா என்பது தேர்தலுக்கு பின் தெரியவரும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 7-வது முறையாக வேட்புமனு தாக்கல் செய்தார். எடப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் தனது வேட்புமனுவை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், முதன் முதலாக 1989-ஆம் ஆண்டு போட்டியிட ஜெயலலிதா வாய்ப்பளித்தார்.அப்போது நான் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். அதிலிருந்து தொடர்ந்து எனக்கு ஜெயலலிதா வாய்ப்பளித்து வெற்றி பெற்று  எடப்பாடி தொகுதியில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளேன்.

அதிமுகவில் பல்வேறு பொறுப்புகள் வகிக்க ஜெயலலிதா வாய்ப்பளித்தார், எடப்பாடி தொகுதி ஏற்றம் பெற அரும்பாடுபட்டுள்ளேன். அப்போது செய்தியாளர் ஒருவர் நீங்கள் தேர்தல் அறிக்கையில் 6 சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மக்கள் மத்தியில் எடுபட்டதா..? என்ற குற்றசாட்டு எழுந்துள்ளது என கேள்வி எழுப்பினர். அதற்கு முதல்வர் எங்கள் வாக்குறுதிகள் மக்களிடம் எடுபட்டதா..? என்பது தேர்தல் முடிவில் தெரியும் என கூறினார்.

அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்ட தேர்தல் அறிக்கை மக்கள் மகிழ்ச்சி கொள்ளகூடிய அறிக்கை, இன்று பல்வேறு அடித்தட்டு மக்கள் வரைக்கும் இந்த தேர்தல் அறிக்கையை வரவேற்றுள்ளனர். இந்திய முழுவதும் கடனில் உள்ளது. இந்த மாநிலத்தில் கடன் இல்லை. 6 லட்சம் கோடி கடனில் தமிழக அரசு இருந்தாலும், வளர்ச்சி பணிகள் ஓய்வின்றி நடைபெற்று வருகிறது. எடப்பாடி தொகுதியில் அரசு கலைக் கல்லூரி கொண்டுவரப்படும் எடப்பாடி தொகுதியில் சாலை, குடிநீர் வசதியை ஏற்படுத்தி தந்துள்ளேன்.

இதை முன்னிறுத்தி, எதை கோரிக்கையாக வைத்து மக்களிடம் வாக்கு சேகரிப்பீர்கள்..? என கேள்வி எழுப்பியதற்கு,  நான் ஏற்கனவே மக்கள் வைத்த கோரிக்கையை பெரும்பாலும் நிறைவேற்றி விட்டேன். இன்னும் தேர்தல் நேரத்தில் பல கோரிக்கைகள் வரும் என்று எதிர்பார்க்கிறேன். அந்த கோரிக்கைகள் அனைத்து நிறைவேற்றப்படும் என தெரிவித்தார்.

author avatar
murugan
Join our channel google news Youtube