நாங்கள் அண்ணன் தம்பியாக இருக்கிறோம்…வைகோ கருத்து…!!

29

திருப்பூரில் பிரதமர் மோடி வருங்கியை எதிர்த்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் உள்ளிட்ட பலர் மோடியை எதிர்த்து கருப்பு கொடி போராட்டத்தில் ஈடுபட்டு கைதானார்கள்.இந்நிலையில் இந்த போராட்டம் குறித்து தலைமைதாங்கிய வைகோ விளக்கம் அளித்துள்ளார்.

அதில் அவர் கூறுகையில் , நியூட்ரினோ திட்டம் , இந்தி சமஸ்கிருத திணிப்பு , இந்துத்துவத்தை திணித்து இந்துத்துவா வை பரப்பும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது.தமிழ்நாட்டில் நாங்கள் அண்ணன் தம்பியாக இருக்கிறோம்.  சைவர்கள் வைணவர்கள் முஸ்லிம்கள் கிறிஸ்தவர்கள் பகுத்தறிவாளிகள் எல்லாம் ஒற்றுமையாக இருக்கும் தமிழ்நாட்டில் மாநிலத்தை போல வகுப்பு வாத மோதலை உண்டாக்க நினைக்கும் மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்தினோம் என்றார் .