நாம் இருவரும் எதிர்-எதிர் கட்சிகள் தான்! எதிரிகள் கிடையாது – ஜோ பைடன்

நாம் இருவரும் எதிர்-எதிர் கட்சிகள் தான்! எதிரிகள் கிடையாது – ஜோ பைடன்

வெற்றியை நெருங்கி வரும் ஜனநாயக கட்சி தலைவர் ஜோ பைடன் பதிவிட்ட முக்கியமான பதிவு. 

அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த 3-ம் தேதி நடைபெற்று முடிந்த  நிலையில், வாக்கு என்னும்  பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், ஜனநாயக கட்சி தலைவர், ஜோ பைடன் 264 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்து  வருகிறார்.

இந்நிலையில், வாக்கு எண்ணிக்கையில் மோசடி நடைபெறுவதாக ட்ரம்ப் நீதிமன்றத்தை  நாடினார்.  ஆனால், எந்த ஆதாரமும் இல்லாத காரணத்தால் இவரது வழக்கு தள்ளுபடி  செய்யப்பட்டது. ட்ரம்ப் மற்றும் பைடனை பொறுத்தவரையில், இருவரும் மறைமுகமாகவும், நேரடியாகவும் மோதி வருகின்றனர்.

இதனையடுத்து, ஜோ பைடன் வெற்றியை நெருங்கி வரும்  வேளையில், தனது ட்வீட்டர் பக்கதில் முக்கியமான ஒரு பதிவினை  பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘நாம் இருவரும் எதிர்-எதிர் கட்சிகள் தான். எதிரிகள் கிடையாது. நாம்  அமெரிக்கர்கள். நமது அரசியலின் நோக்கம் முற்றிலும் இடைவிடாத போர் கிடையாது.’ என பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube