இலங்கைத் தமிழர்களின் நலன் – ஆலோசனை குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியீடு!

இலங்கைத் தமிழர்களின் நலனுக்கான ஆலோசனை குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு.

மறுவாய்வு முகாம்களில் வாழும் இலங்கை தமிழர்களின் நலன் காக்க தமிழ்நாடு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் தலைமையில் 20 பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.

சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் தலையிலான குழுவில், ஆலோசனைக் குழுவின் துணைத் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மூத்த பத்திரிகையாளர் கோவி. லெனின், சட்ட வல்லுநர் மனுராஜ் சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழர்கள் வசிக்கும் முகாம்களின் உட்கட்டமைப்பு, அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்கு இந்த குழு உதவும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இலங்கை தமிழர் நலனை காக்க, கடந்த ஆகஸ்ட் 27ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்