Zoom ஆப்புக்கு தடை விதிக்க வேண்டி பொதுநல வழக்கு!

தற்பொழுது அதிகளவில் மக்களால் பயன்படுத்தப்படும் ஜூம் ஆப்புக்கு தடை விதிக்கக் கோரி பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. தற்பொழுது வரை 50 லட்சத்துக்கும் அதிகமானோர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கடந்த 50 நாட்களுக்கும் மேலாக இந்தியா முழுவதும் தொடர் ஊரடங்கு கடைபிடிக்கபட்டுக்கொண்டு உள்ளது. 

இதனை தொடர்ந்து மக்கள் நெறி சந்திக்கும் வாய்ப்புகள் இல்லாததால், மாணவர்களின் படிப்புகளுக்காக, உறவினர்களின் சாதிப்புகளுக்காக ZOOM எனும் வீடியோ கால் சேவை கொண்ட ஆப்பை அதிகளவில் பயன்படுத்துகிறார்கள்.

ஆனால், இந்த zoom ஆப் தனிமனித ரகசியங்களை பாதுகாப்பதற்கு உகந்ததாக இல்லை எனவும், இதனால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும் இந்த ஆப் மீது பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் மத்திய அரசின் பதிலை கோரி ஒத்தி வைத்துள்ளது. 

author avatar
Rebekal