போராளிகளுக்கு வீரவணக்கம் – தமிழகத்தின் கருப்பு நாள் இது : கனிமொழி எம்.பி

உயிரிழந்த தூத்துக்குடி போராளிகளுக்கு வீரவணக்கம் என கனிமொழி எம்.பி ட்வீட். 

தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக,கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ம் தேதி தூத்துக்குடி மக்கள் நடத்திய போராட்டத்தில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில், 13 பேர் பரிதாமாக கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.

இந்நிலையில்,தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு இன்று 4-ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதுகுறித்து  அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தூத்துக்குடியில் தங்கள் மண்ணுக்காகவும், காற்றுக்காகவும், தண்ணீருக்காகவும் போராடிய அப்பாவி மக்கள் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழகத்தின் கருப்பு நாள் இது. பாதிக்கப்பட்ட மக்களோடு என்றும் உடனிருப்பேன் என நமது முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் துணை நின்று ஆறுதல் தந்துகொண்டிருக்கிறார்.

வளர்ச்சி என்ற பெயரில், சுற்றுப்புறச்சூழலையும், எதிர்காலத் தலைமுறையையும் பாதிக்கக் கூடிய எதையும் அனுமதிக்க மாட்டோம் என்று இந்நாளில் உறுதி ஏற்றுக்கொள்வோம். உயிரிழந்த தூத்துக்குடி போராளிகளுக்கு வீரவணக்கம்.’ என பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment