ஜாக்ரெப் ஓபன் மல்யுத்தம்: முதல் தங்கம் வென்றார் இந்திய மல்யுத்த வீரர் அமன் செஹ்ராவத்.!

ஜாக்ரெப் ஓபன் மல்யுத்த போட்டியில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் (57 கிலோ எடை பிரிவு) இந்தியா- சீனா நாடுகள் மோதினர்.

இதில், இந்திய வீரர் அமன் செஹ்ராவத், சீன வீரரான ஜூ வான்ஹாவோவை வீழ்த்தி தங்கம் வென்றார்.

இப்பொது, அமன் செஹ்ராவத் 2024 ஆம் ஆண்டில் பதக்கம் வென்ற முதல் இந்திய மல்யுத்த வீரர் ஆனார்.

இந்தியாவின் அமன் செஹ்ராவத் 10-0 என்ற புள்ளிக் கணக்கில் உலக நம்பர் 1 மல்யுத்த வீரர் வான்ஹாவோவை வீழ்த்தி அபாரமாக வெற்றிபெற்றார்.

மேலும், ஒலிம்பிக் நாயகன் தீபக் புனியா, யாஷ் ஆகியோர் தோல்வி அடைந்தனர்.

முன்னதாக, அமன் 2023-ல் சீனியர் சர்க்யூட் மற்றும் ஆசிய சாம்பியன்ஷிப் வெற்றியின் மூலம் தனது முத்திரையை பதித்தார்.

பின்னர், ஆசிய விளையாட்டு வெண்கலத்துடன் அதைத் தொடர்ந்தார். 

இதனை தொடர்ந்து டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற ரவி தஹியா காயத்தில் இருந்து மீண்டு வரும் அதே எடைப் பிரிவில் அவர் போட்டியிடுகிறார்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் விலகிய விராட் கோலி!