Technology

அறிமுகத்துக்கு தயாராகும் சியோமி 14 அல்ட்ரா.! வெளியான அம்சங்கள்.!

சியோமி தனது புதிய சியோமி 14 அல்ட்ரா ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த உள்ளது.

சியோமி 14 அல்ட்ராவில் 2K ரெசல்யூஷன் மற்றும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.7 இன்ச் அமோலெட் டிஸ்பிளே உள்ளது.

அட்ரினோ ஜிபியு உடன் இணைக்கப்பட்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது.

இதில் 50 எம்பி மெயின் கேமரா, 50 எம்பி அல்ட்ரா-வைட்-ஆங்கிள், 50 எம்பி OIS டெலிஃபோட்டோ கேமரா மற்றும் 50 எம்பி சோனி LYT900 சென்சார் கொண்ட கேமரா உள்ளது.

மேலும் செல்ஃபிகாக 32எம்பி கேமரா பொருத்தப்படும். சியோமி 14 அல்ட்ரா போனில் அதிக நேர பயன்பாட்டிற்காக 5,500 mAh திறன் கொண்ட பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

ஸ்விஃப்ட் 120 வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 50 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் ரிவர்ஸ் சார்ஜிங்கும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 16 ஜிபி ரேம் + 1 டிபி வரையிலான ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்கள் அறிமுகமாகலாம்.

வெளியீட்டிற்கு முன்பே கசிந்த விலை.! ஐக்யூ-வின் எந்த மாடலுக்கு தெரியுமா.?