Technology

இன்று இந்திய சந்தைக்கும் வரும் Xiaomi 14 series… எதிர்பார்ப்பில் ஸ்மார்ட்போன் வாசிகள்!

07.03.2024 இன்று இந்தியாவில் சியோமி நிறுவனம் தனது முதன்மை ஸ்மார்ட்போன் சீரிஸை சந்தையில் அறிமுகப்படுத்தவுள்ளது.

சியோமி,தனது 14சீரிஸை கடந்தாண்டு அக்டோபர் 26ம் தேதி சீனாவில் வெளிவந்த நிலையில்,இன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது.

சியோமி 14 சீரிஸில் Xiaomi 14, Xiaomi 14 Pro, Xiaomi 14 Ultra ஆகிய மூன்று மாடல்கள் அறிமுகமாக உள்ளது.

07.03.2024 இன்று மாலை 6 மணிக்கு இந்த மாடல்களின் வெளியீட்டு நிகழ்வு  Xiaomi  நிறுவனம் YouTube சேனலில் நேரடியாக ஒளிபரப்பாகும் என கூறப்பட்டுள்ளது.

Xiaomi 14 சீரியசுக்கான விலை சுமார் ரூ.75,000 இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

50MP ஹண்டர் 900 முதன்மை சென்சார், 50MP டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் மற்றொரு 50MP அல்ட்ரா-வைட் ஆகியவை கொண்ட டிரிபிள் ரியர் கேமரா இருக்கிறது.

செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 32MP முன் கேமராவைக் கொண்டிருக்கும். இதுபோன்று, USB Type-C போர்ட் USB 3.2 Gen 1 கொண்டது.

Xiaomi 14-ஆனது 90W வயர்டு சார்ஜிங், 50W வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 10W ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் ஆகிய அம்சங்களுடன் 4,610 mAh பேட்டரியை கொண்டுள்ளது.

Xiaomi 14 ஸ்மார்ட் போன், ஏடி க்ரீன்,கருப்பு,வெள்ளை மற்றும் ஸ்னோ மவுண்டன் பிங்க் வண்ணங்களில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அசத்தலான அம்சங்கள்.. மலிவான விலை.. இந்தியாவில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி F15 சீரிஸ்!