உங்க வீட்டு மளிகை பொருள் சீக்கிரம் கெட்டுப் போகுதா? அப்போ இந்த டிப்ஸை ட்ரை பண்ணுங்க..

Lifestyle

பருப்பு (ம) பயறு வகைகள் சேகரிக்கும் போது அதன் மேல் பூண்டின் காம்பை போட்டு வைக்கலாம் (அ) தேங்காயின் ஓடு, பிரியாணி இலை போட்டு வைத்தால் கூட  விரைவில் பூச்சிகள் வராது.

ஒரு கண்ணாடி பாட்டில் அல்லது சில்வர் டப்பாவில் கால் ஸ்பூன் வெந்தயம் சேர்த்து அதன் பிறகு நெய்யை ஊற்றி வைத்தால் நீண்ட நாள் நல்ல மணமாக இருக்கும்.

சர்க்கரை மற்றும் வெள்ளம் இருக்கும் இடத்தில் நான்கு கிராம்பை போட்டு வைத்தால் எறும்புகள் அண்டாது.

புளியை நாம் சேகரிக்கும் போது அதன் விதைகள் (ம) நார்களை நீக்கி விட்டு ஒரு ஜாடியில் போட்டு தேங்காய் ஓடை மேலே போட்டு வைக்கவும்.

மிளகாய்த்தூளின் வாசனை மற்றும் சுவை நீண்ட நாட்கள் இருக்க காய்ந்த மிளகாயை போட்டு காற்று புகாதவாறு டைட்டாக அடைத்து வைக்க வேண்டும்.

உப்பு ஜாடியில் தேங்காய் ஓடை போட்டு வைத்தால் உப்பில் தண்ணீர் இருந்தால் அதை அந்த ஓடு உறிஞ்சிக் கொள்ளும்.

தேங்காய் எண்ணெய் நீண்ட நாள் கெடாமல் இருக்க நான்கு மிளகு பாட்டிலில் சேர்த்து பயன்படுத்தவும்.

அஞ்சரை பெட்டியில் மிளகாய் காம்புகளை போட்டு வைத்தால் அந்தப் பொருள்களில் எளிதில் வண்டுகள் வராது.

அரிசியில் வண்டு புழு போன்றவை வராமல் இருக்க வசம்பு மற்றும் பட்டையை அரசியல் போட்டு கலந்து வைக்கலாம்.

வெள்ளைப் பூண்டு கெடாமல் இருக்க உப்பை வறுத்து பூண்டு இருக்கும் டப்பாவில் போட்டு அதன் மேலே பூண்டை வைத்தால் ஒரு வருடம் ஆனாலும் கெடாமல் இருக்கும்.

இந்த முறைகளை கையாண்டு மளிகை பொருட்களை சேகரித்து நீண்டநாள் வரை பயன்படுத்துங்கள்.

அடடே இது தெரியாம போச்சே! தயிர் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மையா?