ஸ்லேட் குச்சி சாப்பிடும் பழக்கம் உள்ளவரா.? அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்.

Lifestyle

ஸ்லேட் குச்சிகள் எழுத பயன்படுகிறதோ இல்லையோ, ஆனால் சிலருக்கு சாப்பிட நன்றாகவே பயன்படுகிறது.

இந்த குச்சிகளை ஏதோ முறுக்கு சாப்பிடுவது போல் நொறுக் நொறுக் என்று சிலர் கடித்து சாப்பிடுவார்கள்.

இதில் அதிக அளவு சுண்ணாம்பு சேர்த்துத் தயாரிக்கப்படுகிறது. இந்தச் சுண்ணாம்பு நம் உடலுக்கு உகந்தது அல்ல.

குறிப்பாக இது வயிற்று பகுதியில் புண்களை ஏற்படுத்தும், சிறுநீரக செயலிழப்பையும் ஏற்படுத்தும்.

அது மட்டுமல்லாமல் உடலில் பல உடல் உறுப்புகளையும் பாதிப்படையச் செய்யும் என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

இதனால் மற்ற சத்துக்களும் உறிஞ்சப்படாமல் தடுக்கப்படுகிறது. எனவே ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும் நிலை உண்டாகும்.

வைட்டமின் சி, இரும்புச்சத்து மற்றும் புரதம் நிறைந்த உணவுகள் நாம் அதிக அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதிலிருந்து வெளிவர நாம் செய்ய வேண்டியவை

அது மட்டும் அல்லாமல் குடும்ப நபர்கள் அவர்களுக்கு நேர்மறையான எண்ணங்களை கூறி அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.

இதற்கு அடிமையாக உள்ளவர்கள் மருத்துவரை ஆலோசிப்பதை சிறந்தது.

அட நெல்லிக்காயில் துவையல் செய்யலாமா..? அது எப்படிங்க..?