Cinema

மீண்டும் ரீ-ரிலீஸ் ஆகும் பருத்திவீரன்?

இயக்குனர் அமீர் இயக்கத்தில் நடிகர் கார்த்தி, பிரியாமணி ஆகியோர் நடிப்பில் கடந்த 2007 ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான திரைப்படம் பருத்திவீரன்.

இந்த திரைப்படத்தில் சரவணன், கஞ்சா கருப்பு, பொன்வண்ணன், சம்பத்ராஜ், உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள்.

2007 ஆண்டுகளில் வெளியான இந்த திரைப்படம் இன்று வரை பலருடைய பேவரைட் படமாகவும் இருக்கிறது.

இந்த நிலையில், இந்த திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு ஞானவேல் ராஜா பேட்டி ஒன்றில் இயக்குனர் அமீர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது பெரிய விவகாரமாக மாறியது.

அமீர் பற்றி ஞானவேல் பேசியது தவறு என அமீருக்கு ஆதரவாக திரையுலகில் பலரும் கண்டனங்களை தெரிவித்து இருந்தனர்.

அதன்பன்,  ஞானவேல் ராஜா வருத்தம் தெரிவிப்பதாக கடிதம் ஒன்றையும் வெளியிட்டு இருந்தார்.

இந்த விவகாரம் ஒரு பக்கம் முடிந்திருக்கும் நிலையில் தற்போது படத்தை ஞானவேல் ராஜா ரீ-ரிலீஸ் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பூஜா கண்ணன் நிச்சயதார்த்தம்! சாய் பல்லவி நடனம்.. வைரலாகும் புகைப்படங்கள்