Technology

5,000mAh பேட்டரி.. 8ஜிபி ரேம்..டூயல் ஸ்பீக்கர்ஸ்.! இந்தியாவில் அறிமுகமாகும் டெக்னோ மாடல்.?

டெக்னோ (Tecno) நிறுவனம், அதன் ஸ்பார்க் கோ 2024 ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் வெளியிட உள்ளது.

அதன்படி, ஸ்பார்க் கோ 2024, இந்தியாவில் அமேசானில் பிரத்யேக அறிமுகத்திற்கு தயாராகி வருகிறது.

இதில் பஞ்ச்-ஹோல் கட்அவுட் உடன் 720 X 1612 பிக்சல்கள் ரெசல்யூஷன், 90Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.6 இன்ச் எச்டி+ எல்சிடி டிஸ்பிளே உள்ளது.

ஆப்பிளின் டைனமிக் ஐலேண்ட் போலவே இருக்கும் டைனமிக் பார்ட்டுடன் வருகிறது.

ஆண்ட்ராய்டு டி-கோ ஓஎஸ்-ல் இயங்கக்கூடிய இந்த போனில், யுனிசாக்கின் டி606 ஆக்டா-கோர் சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது.

பின்புறத்தில் டூயல் எல்இடி (LED) ப்ளாஷ் கொண்ட 13 எம்பி மெயின் கேமரா மற்றும் 2 எம்பி ஏஐ லென்ஸ் உள்ளது. செல்ஃபிக்காக 8 எம்பி கேமரா உள்ளது.

10 வாட்ஸ் சார்ஜிங் வசதியுடன் கூடிய 5,000 mAh திறன் கொண்ட லித்தியம் பேட்டரி, டெக்னோ ஸ்பார்க் கோ 2024 போனில் பொருத்தப்பட்டுள்ளது.

கிராவிட்டி பிளாக், மிஸ்டரி ஒயிட், அல்பெங்லோ கோல்ட் மற்றும் மேஜிக் ஸ்கின் ஆகிய 4 வண்ணங்களில் அறிமுகமாகியுள்ளது.

இதில் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ், 8 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட 3 வேரியண்ட்கள் உள்ளன.

ஐபோன் உற்பத்தியை இரட்டிப்பாக்கும் டாடா.! ஓசூர் ஆலையை விரிவுபடுத்த முடிவு.!