Technology

இதுவரை இல்லாத மிகப்பெரிய டிஸ்ப்ளே… கூகுள் பிக்சல் ஃபோல்ட் 2 குறித்த சுவாரஸ்யங்கள்..

ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகமாக காத்திருக்கும் கூகுள் நிறுவனத்தின் Pixel Fold 2  பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

இது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போகளில் இதுவரை பார்க்காத மிகப்பெரிய டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும் என தெரிவிக்கின்றன.

Pixel Fold 2 6.29-இன்ச் அவுட்டர் டிஸ்ப்ளேவுடன் ஈர்க்கக்கூடிய 8.02-இன்ச் இன்னர் டிஸ்பிளேவைக் கொண்டிருக்கக்கூடும்.

இது தொழில்நுட்ப ஆர்வலர்களிடையே உற்சாகத்தைத் தூண்டியுள்ளது. மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் சந்தையில் கேம்-சேஞ்சராக Pixel Fold 2 இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

இப்போனில் உள்ள  டிஸ்ப்ளேவில் ரியல் எஸ்டேட் கணிசமான அதிகரித்திருப்பதால், Pixel Fold 1 உடன் ஒப்பிடும்போது அதில் பல்வேறு மேம்படுத்தல்கள் செய்யப்பட்டுள்ளது.

Pixel Fold 2, மே 14 ஆம் தேதி திட்டமிடப்பட்டு அதன் வருடாந்திர Google I/O நிகழ்வில் Google Pixel Fold 2-ஐ வெளியிடலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

மடிக்கக்கூடிய சாதனம் புதுப்பிக்கப்பட்ட பின்புற கேமரா வடிவமைப்பைக் கொண்டிருக்கும். பிக்சல் ஃபோல்ட் 2 புதிய டென்சர் ஜி4 சிப் மூலம் இயக்கப்படலாம்.

இதுபோன்று Pixel Fold 2 ஆனது பிக்சல் 8a மற்றும் ஆண்ட்ராய்டு 15 மென்பொருள் அப்டேட் மற்றும் பல்வேறு முக்கிய அம்சங்களுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Pixel Fold 2 இன் வெளியீடு, மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் கூறப்படுகிறது.

ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு ஆப்பு… இனி வாட்ஸ்அப்பில் இதனை செய்ய முடியாது!