அடடே! நம் குழம்பில் சேர்க்கும் புளிக்கு இவ்வளவு மகத்துவமா?

Lifestyle

அறுசுவைகளில் ஒன்றான புளி, நம் நாவில் எச்சில் ஊட்டும் தனித்துவமான சுவையுடையது. புளி இந்தியாவின் பேரிச்சம்பழம் என்றும் அழைக்கப்படுகிறது.

சமையலில் புளி குழம்பு, புளி ரசம், புளி சாதம் போன்ற பல வகைகளில் பயன்படுத்தப்படுகிறது. 

புளி  இல்லாத மீன் குழம்பு, காரக்குழம்பு கிடையாது.புளியை சேர்த்து சமைக்கும் உணவு எளிதில் கெட்டுப்போவதில்லை.

கோவில்களில் கூட பானகம் என்று சொல்லப்படும் புளி கரைசையில் சர்க்கரை கலந்த பானம்  கொடுப்பார்கள்.

இதில் விட்டமின் பி, டார்ட்டாரிக் ஆசிட், கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம் பாஸ்பரஸ் , அயன் (ம) பைட்டோ நியூட்ரியன்ட்ஸ் நிறைந்துள்ளது.

இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது மற்றும் நம் மூளையின் செயல் திறனை அதிகரிக்கச் செய்கிறது.

வெயில் காலங்களில் ஏற்படும் நீர்க்கடுப்பு ஆண்கள் பெண்கள் என இருவருக்குமே இந்த தொந்தரவு வரும். அப்போது புளி கரைசலுடன் சர்க்கரை சேர்த்து பருகினால் உடனே நின்று விடும்.

புளியின்  கொட்டைகளை முழுமையாகவோ (அ) தோல் நீக்கியோ சாப்பிட்டால் நீர் கடுப்பு நீங்கும். ஆண்களுக்கு விதைப்பையில் ஏற்படும் கேன்சரை தடுக்கும்.

நல்ல ஜீரண சக்தியை ஏற்படுத்தி, கொழுப்பை கரைத்து, எலும்பு தேய்மானத்தை தடுக்கும்.

புளி கரைசலுடன் உப்பு சேர்த்து கொதிக்க வைத்து கூழ் பதத்திற்கு வந்ததும் மிதமான சூடு இருக்கும்போது வலி (ம) வீக்கம் உள்ள  இடங்களில் பத்து போட்டு வந்தால் குணமாகும்.

குழம்பில் புளியை ஊற்றி சமைக்கும் போது காய்கறிகளில் உள்ள கனிமச்சத்து மற்றும் தாது சத்துக்கள் அப்படியே நம் உடலுக்கு கிடைக்கும் என ஆராய்ச்சிகளில் கூறப்படுகிறது.

அடடே! சோறு வடித்த தண்ணீரில் இவ்வளவு நன்மைகளா? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!