Cinema

லலித் குமார் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தளபதி விஜய்! வைரலாகும் புகைப்படங்கள்!

நடிகர் விஜய் தயாரிப்பாளர் லலித் குமார் மகனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நேற்று இரவு கலந்து கொண்டு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்தார்.

தயாரிப்பாளர் லலித் குமார் விஜய்யை வைத்து மாஸ்டர் மற்றும் லியோ ஆகிய படங்களை இயக்கி இருக்கிறார்.

இந்த இரண்டு படங்களுமே பெரிய வெற்றியை பெற்று லலித்திற்கு பெரிய அளவில் லாபத்தை கொடுத்துள்ளது.

இதிலும் லலித் குமார் கடைசியாக விஜய்யை வைத்து தயாரித்திருந்த லியோ படம் உலகம் முழுவதும் 600 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது.

இந்த பிரமாண்ட வெற்றியோடு லலித்குமார் தன்னுடைய மகன் திருமணத்தையும், மிக பிரமாண்டமாக நடத்தியுள்ளார்.

அதன்படி, லலித் குமாரின் மகன் திருமணம் நேற்று நடைபெற்றுள்ளது. அந்த திருமணத்திற்கான வரவேற்பு நிகழ்ச்சி சென்னை திருவான்மியூரில் நடைபெற்றது.

அந்த விழாவில் லலித் குமாரின் உறவினர்கள் கலந்துகொண்டார்கள். விஜய்க்கும் லலித் குமார் நெருங்கிய சொந்தம் தான்.

விஜய் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இந்த புதுமண தம்பதிகளை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.

அப்போது எடுக்கப்பட்ட அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

தற்போது தன்னுடைய 68-வது திரைப்படமான தளபதி 68 திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.

சிகப்பு உடையில் சிக்கென்னு இருக்கிங்க..! காஜல் அகர்வால்-ன் கியூட் கிளிக்.!