Technology

ஐபோன் உற்பத்தியை இரட்டிப்பாக்கும் டாடா.! ஓசூர் ஆலையை விரிவுபடுத்த முடிவு.!

கடந்த அக்- 27 அன்று இந்தியாவில் உள்ள ஐபோன் உற்பத்தி ஆலையை டாடா குழுமம் கையகப்படுத்தியது.

இந்த ஆலையை 125 மில்லியன் டாலர்களுக்கு டாடா குழுமம் வாங்கியது.

இப்போது டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம், அதன் ஓசூர் ஆலையை விரிவுபடுத்தி ஐபோன் உற்பத்தி திறனை இரட்டிப்பாக்க உள்ளது.

இதனால் ஆப்பிள் ஐபோன்களின் உற்பத்தி அதிகமாவதோடு, ஏற்றுமதி அளவும் அதிகரிக்கும்.

ஓசூரில் உள்ள டாடா குழுமத்தின் ஐபோன் உற்பத்தி ஆலை சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இந்த ஆலையில் 15,000 பேர் பணிபுரிகின்றனர்.

இப்போது இந்த ஓசூர் ஆலையை அடுத்த 12 முதல் 18 மாதங்களில் விரிவுபடுத்த டாடா குழுமம் திட்டமிட்டுள்ளது.

இந்த ஆலை விரிவாக்கம் செய்யப்பட்டவுடன் 25,000 முதல் 28,000 பேர் வேலைவாய்ப்புக்கான வாய்ப்பைப் பெறுவார்கள்.

இனி புதிய கேம்-ஐ டவுன்லோட் செய்ய தேவையில்லை..! யூடியூப் அசத்தல் வசதி.!