பயணம் செய்யும்போது வாந்தி மற்றும் தலைவலியால் அவதிப்படுறீர்களா? இதோ உங்களுக்கான டிப்ஸ்!

Lifestyle

பயணத்தின் போது ஒரு சிலருக்கு வாந்தியும் ஒரு சிலருக்கு தலைவலியும் ஏற்படும்.

அதாவது மூளையானது இரைப்பையின் செரிமானத்தை நிறுத்தி வைக்கும். அப்போதுதான் நமக்கு வாந்தி ஏற்படுகிறது.

நாம் பயணம் மேற்கொள்ளும் ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே உணவு எடுத்துக் கொள்வது சிறந்ததாகும்.

நீர் சத்து உள்ள சாப்பாடுகளை எடுத்துக் கொள்வது சிறந்தது. தயிர் சாதம் போன்ற உணவுகள் எடுத்துக் கொள்ளலாம்.

எண்ணெயில் செய்த எந்த உணவுகளையும் எடுத்துக் கொள்ளக்கூடாது.

பஸ்ஸில் போனால் வாந்தி வரும் என்ற சிந்தனையை மாற்ற  வேண்டும். அதிகமான காற்று காதுகளில் செல்லாதபடி காதுகளை மூடி கொள்ள வேண்டும்.

எலுமிச்சை சாறுடன் சிறிது உப்பு கலந்து குடித்தால் குமட்டலை தடுக்கும்.

பயணிக்கும் போது ஆரஞ்சு மிட்டாய், நெல்லிக்காய் போன்றவை சாப்பிட்டு கொள்ளலாம். நொறுக்கு தீனிகளை தவிர்ப்பது நல்லது.

மேலும் முன் சீட்டில் பயணம் மேற்கொள்வது சிறந்ததாகும் ஏனென்றால் நமது கவனத்தை ஒரே இடத்தில் வைத்திருக்கும். இதனால் வாந்தி ஏற்படும் சிந்தனை இருக்காது.

ஆகவே இந்த பயனுள்ள குறிப்புகளை செயல்படுத்தி ஒரு மகிழ்ச்சியான பயணத்தை மேற்கொள்ளுங்கள்.

அடடே.! நாம் சொல்லும் நன்றிக்கு இவ்வளவு சக்தி இருக்குதா..!