சேற்று புண்ணால் அவதிப்படுகிறீர்களா? விரைவில் குணமாக உங்களுக்கான டிப்ஸ்!

Lifestyle

மழைக்காலங்களில் சேற்றுப்புண் அனைவருக்கும் வரும். அதிலும் பெண்களுக்கு துணி துவைப்பது, பாத்திரம் கழுவுவதும் என தண்ணீரில் அதிகம் நேரம் செலவிடுவதால் அதிகம் வரும்.

மேலும் உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருந்தால் பாதத்திற்கு சரியாக ரத்த ஓட்டம் இல்லாமல் இருப்பவை போன்றவற்றால் ஏற்படும்.

பாதங்களை சுத்தம் செய்து உலர்ந்த நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும்.

நம் பாதங்களை பாதுகாக்கும் முறை:

தேங்கியுள்ள மழை நீரில் மிதிக்காமல் இருக்க வேண்டும். ஒருவேளை தண்ணீர் பட்டால் பாதங்களை துணியால் சுத்தம் செய்து உலர்த்த வேண்டும்.

வெளியில் செல்லும்போது காலில் தேங்காய் எண்ணெய் தேய்த்துச் சென்றாள் அந்த என்ன பசைக்கு ஈரம் காலில் ஒட்டாது.

வாரம் ஒரு முறை வெது வெதுப்பான நீரில் கல் உப்பு (ம) எலுமிச்சை பழத்தை பிழிந்து 20 நிமிடம் கால்களை அதில் ஊற வைத்து பராமரித்துக் கொள்ள வேண்டும்.

மஞ்சள் மற்றும் வேப்பிலை அரைத்து சேற்றுப்புண் மேல் அரைத்து பூச வேண்டும்.

குணப்படுத்தும் முறை:

தேங்காய் எண்ணெய் மற்றும் வேப்ப எண்ணையை கலந்து சேற்றுப் புண்ணில் தடவி வர வேண்டும். இது கிருமிகளை கொள்ளும் தன்மையுடையது.

யூகலிப்டஸ் ஆயில் மற்றும் கற்றாழை எண்ணெய் சேர்த்து அரிப்பு இருக்கும் இடத்தில் போட்டு இரண்டு மணி நேரம் கழித்து கழுவி வர வேண்டும்.

மண்ணெண்ணையை சேற்றுக் புண் இருக்கும் இடத்தில் போட்டால் விரைவில் குணமாகும் மேலும் அரிப்பையும் கட்டுப்படுத்தும்.

காலணிகளை மாற்றி மாற்றி அணிய வேண்டும். ஒரே காலணிகளை போடுவதை தவிர்க்கவும். எட்டு மணி நேரத்திற்கு மேல் ஷூ அணிவதை தவிர்க்கவும்.

பின்வரும் வழிமுறைகளை பின்பற்றி கால்களை பராமரித்து மழைக்காலத்தில் ஏற்படும் சேற்றுப் புண்ணை தடுக்கலாம். வருமுன் காப்பதே சிறந்ததாகும்.

எப்பேர்பட்ட முகப்பருக்களாக இருந்தாலும் சரி இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க.!